பிக் பாஸ் போல் வரும் "புது நிகழ்ச்சி”! விஜய் சேதுபதி இடத்தில் பரத்! பெரிய சம்பவமே இருக்கு
சென்னை: சாவேரா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சி, சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து விட்டது. "பிக் பிட்ச்சர்" என்ற புதிய ரியாலிட்டி ஷோ அறிமுக விழா அங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வரும் என்பதால், இது நேரடியாக "பேன் இந்தியா" லெவலில் பிரபலமாக ஒரு முயற்சி என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாக பார்க்கலாம்

யார் யார் தொகுப்பாளர்கள்?
தமிழில் இந்த நிகழ்ச்சியை பரத் தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் இந்திரஜித் சுகுமாரன், தெலுங்கில் நவ்தீப், கன்னடத்தில் வசிஷ்டா என். சிம்ஹா, இந்தியில் விஜய் ராஸ் - இப்படி ஒவ்வொரு மொழியிலும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.
இதுவே இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரிய கவனத்தை பெற்றுத் தந்திருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இதுபோலத்தான் எல்லா மொழிகளிலும் தொடங்கப்பட்ட போது அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களை வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு போனார்களோ அதேபோன்று இப்போதும் முயற்சி செய்து இருக்கிறார்கள்.
நிகழ்ச்சி பற்றிய தகவல்
"பிக் பிட்ச்சர்" சாதாரண ரியாலிட்டி ஷோ இல்லையாம். இது சினிமா எப்படி உருவாகிறது? அதன் பின்னால இருக்கிற உழைப்பு என்ன? என்பதைக் காட்டப் போகும் நிகழ்ச்சியாம்.
நாம் திரையரங்கில் மூன்று மணி நேரம் பார்த்து ரசிக்கிற ஒரு படத்துக்குப் பின்னால் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள், என்ன என்ன நடக்கிறது என்பதை நேரடியாக காட்டும் முயற்சி தான் இதுவாம்.
பரத் சொன்ன முக்கிய விஷயம்
இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய பரத், "சினிமா என்பது சும்மா ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்ல. அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பை மக்கள் உணரணும். அதுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி." அதனால், சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கும், சாதாரணமாக படம் பார்க்கிறவர்களுக்கும் - இருவருக்கும் இது பிடிக்கும்.

தேவாவின் பார்வை
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவா "நாம் ஒரு படம் பார்த்துட்டு உடனே விமர்சனம் பண்ணிடுறோம். ஆனா அந்த படம் எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாகுது என்று தெரியாது. அதை உணர வைக்கும் முயற்சிதான் இது" என்று அவர் கூறினார். மேலும், இந்த நிகழ்ச்சிக்கான பாடலை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மாதிரி உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
நேராக சொல்லணும்னா, இந்த "பிக் பிட்ச்சர்" ஷோ இப்போது பெரிய ஹைப் இல்லாம இருக்கலாம். ஆனா நம்மளுக்கே தெரியும்...பிக் பாஸ் தொடங்கிய போது கூட எவ்வளவு விமர்சனம் வந்தது. "இது என்ன நிகழ்ச்சி?" என்று பலரும் கேள்வி கேட்டார்கள்.
ஆனா சில எபிசோடுகள் கழிச்சு, "இதுல என்ன இருக்கு?" என்று பார்க்க ஆரம்பித்தவர்கள் அதையே தொடர்ந்து பார்த்தார்கள். அதே மாதிரி தான் பல ரியாலிட்டி ஷோக்களும். தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும், பிறகு தான் மக்கள் அதில் கனெக்ட் ஆக ஆரம்பிப்பார்கள். அதேபோல இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறதா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications