This Week OTT Releases: கிறிஸ்துமஸ் வாரத்தில் ஒடிடியில் வெளியாகும் புதிய படங்கள்& சீரிஸ்! டபுள் விருந்து
சென்னை: கிறிஸ்துமஸ் வாரம் தொடங்கியுள்ள நிலையில், முன்னணி OTT தளங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய படங்கள் மற்றும் தொடர்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றன. விடுமுறை காலத்தை வீட்டிலேயே சினிமா மற்றும் வெப் தொடர்களுடன் கொண்டாட நினைப்பவர்களுக்கு, இந்த வாரம் OTT தளங்களில் பல்வேறு மொழிகளில் கவனம் ஈர்க்கும் உள்ளடக்கங்கள் வெளியாக உள்ளன.
இந்த வாரத்தின் முக்கிய தெலுங்கு OTT வெளியீடுகளில் ஒன்று 'The Last Show'. ETV Win தளத்தில் 'கதா சுதா' (Katha Sudha) தொடரின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ள இந்த குறும்படத்தில் சரண் லக்கராஜு, தீரா பிசாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரதீப் மடாலி இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் டிராமா, உணர்வுப்பூர்வமான கதையமைப்பால் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்காக, நடிகர் முனீஸ்காந்த் ஹீரோவாகவும் நடிகை விஜயலட்சுமி கதாநாயகி ஆகவும் நடித்துள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்படம் ZEE5 தளத்தில் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. நடுத்தர குடும்ப வாழ்க்கையின் நகைச்சுவை, சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிகளை பேசும் இந்த படம், தமிழ் மொழியில் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் ராம் போதினேனி நடித்துள்ள 'Andhra King Taluka' இந்த வாரத்தின் முக்கிய டிஜிட்டல் வெளியீடாக பார்க்கப்படுகிறது. மகேஷ் பாபு இயக்கியுள்ள இந்த படம், டிசம்பர் 25 முதல் Netflix-ல் வெளியாகிறது. உபேந்திரா, பாக்யஸ்ரீ போர்சே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், பல மொழிகளில் வெளியிடப்படுவதால், அனைத்து மொழி ரசிகர் வட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட 'Stranger Things' தொடரின் ஐந்தாவது சீசனின் Volume 2, டிசம்பர் 26 முதல் Netflix-ல் வெளியாகிறது. மூன்று எபிசோட்கள் கொண்ட இந்த பகுதி, தொடரின் முக்கிய திருப்பங்களை கொண்டிருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் தெலுங்கு டப் பதிப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத கீர்த்தி சுரேஷ் நடித்த 'Revolver Rita' தற்போது OTT-க்கு வருகிறது. ஜே.கே. சந்துரு இயக்கியுள்ள இந்த படம், டிசம்பர் 26 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹிந்தி சினிமா ரசிகர்களுக்காக ஹர்ஷவர்தன் ரானே நடித்த 'Ek Deewane Ki Deewaniyat' திரைப்படமும் ZEE5 தளத்தில் டிசம்பர் 26 முதல் வெளியாகிறது. திரையரங்குகளில் சுமார் 110 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படும் இந்த ரொமான்டிக் டிராமா, டிஜிட்டல் வெளியீட்டிலும் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், வார இறுதியில் எதிர்பாராத வகையில் மேலும் சில படங்கள் OTT-யில் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications