This Week OTT Releases: இந்த விடுமுறையை கொண்டாட ஒடிடிக்கு வந்த மாஸ் படங்கள்.. செம அப்டேட்
சென்னை: இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்ளும்படி நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. திரையரங்குகளில் பேசப்பட்ட படங்கள் முதல், கலவையான விமர்சனங்களை பெற்ற படங்கள் வரை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக விக்ரம் பிரபுவின் 25வது படமான 'சிறை' ஓடிடி வருகை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சிறை
விக்ரம் பிரபுவின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்த படம் 'சிறை'. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவான இந்த படம், திரையரங்குகளில் வெளியானபோதே பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களை குவித்தது. சில காட்சிகள் பார்ப்பவர்களை கலங்கடிக்கும் அளவுக்கு இருந்ததாக ரசிகர்கள் பேசினார்கள்.
டாணாகாரன் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் லலித்குமாரின் மகள் எல்கே அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியான 'சிறை', விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்கில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
ரெட்ட தல
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் 'ரெட்ட தல'. கிரிஷ் திருக்குமரன் இயக்கிய இந்த படத்தில் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ், ஹரிஸ் பேரிடி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
அருண் விஜய் இரட்டை வேடத்தில் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருந்தாலும், படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் ஆக்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு கவனம் பெற்ற இந்த படம், தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பார்க்காதவர்கள், இப்போது ஓடிடியில் இந்த படத்தை ரசித்து வருகின்றனர்.
தேரே இஷ்க் மெய்ன்
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள மற்றொரு முக்கிய படம் தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்'. ராஞ்சனா, அந்த்ரங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து, மூன்றாவது முறையாக இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் இது.
கீர்த்தி சனோன் நாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம், தமிழ் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை என்றாலும், பாலிவுட்டில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தற்போது இந்த காதல் காவியம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மார்க்
கிச்சா சுதீப் நடிப்பில் வெளியான 'மார்க்' படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், பரபரப்பான திரைக்கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்தது.
மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்த படம், தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஷன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த வாரம் 'மார்க்' ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது.
ஷம்பாலா
இந்த வார ஓடிடி ரிலீஸ்களில் 'ஷம்பாலா' படமும் கவனம் ஈர்க்கிறது. அர்ச்சனா ஐயர், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், ஒரு கிராமத்தில் நடக்கும் மர்மமான சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
மேலும், சோபிதா துலிபாலா நடித்த 'சீக்காடிலோ' அமேசான் ப்ரைம் தளத்திலும், சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்த '45' ஜீ5 தளத்திலும் வெளியாகியுள்ளன. 'ஷம்பாலா' படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசிகர் கூட்டத்துக்காக உருவானவை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட 'சிறை' முதல், ஆக்ஷன், காதல், மர்மம் வரை பல ஜானர்கள் இந்த வார ஓடிடி ரிலீஸ்களில் இடம்பெற்றுள்ளன. திரையரங்கில் தவறவிட்ட படங்களை, வீட்டிலேயே அமர்ந்து பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஓடிடி நல்ல விருந்தாக அமைந்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications