This week OTT: இந்த வாரம் 2026 புத்தாண்டை வரவேற்க ஓடிடியில் களமிறங்கும் படங்கள் & வெப் சீரிஸ்கள்
சென்னை: இந்த வருடத்தின் இறுதி கட்டத்திற்கு அனைவருமே வந்துவிட்டோம், 2025 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2026 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் விதமாக, இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாக உள்ளன.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மட்டுமின்றி, சர்வதேச தொடர்களும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளன. புத்தாண்டு விடுமுறையில் வீட்டிலிருந்தபடியே ரசிக்க ஏற்ற வகையில் வெளியாகும் இந்த ஓடிடி அப்டேட்களை விரிவாக பார்க்கலாம்.

ரன் அவே (Run Away)
பிரிட்டிஷ் த்ரில்லர் வெப் சீரிஸான 'ரன் அவே'யில் ஜேம்ஸ் நெஸ்பிட், எல்லி டி லாங், ரூத் ஜோன்ஸ், ஆல்பிரட் எனோக் ஆகியோர் நடித்துள்ளனர். போதைக்கு அடிமையான தனது மகளை காப்பாற்ற ஒரு தந்தை எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருக்கிறார் என்பதே கதையின் மையம். குற்ற உலகம், குடும்ப ரகசியங்கள் என விறுவிறுப்பான திருப்பங்களுடன் சீரிஸ் நகர்கிறது. இந்த வெப் சீரிஸ் ஜனவரி ஒன்றாம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் வெளியாகிறது.
எக்கோ (Echo)
மலையாளத்தில் உருவாகியுள்ள மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம் 'எக்கோ'. தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன் ராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகசிய புலனாய்வாளர்கள், பழைய பகைகள் மற்றும் மர்ம சம்பவங்கள் ஒரே இடத்தில் மோதும் கதை இதன் பலமாக உள்ளது. பயிற்சி பெற்ற நாய்கள் கதையில் முக்கிய பங்கு வகிப்பது திகில் அனுபவத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்த திரைப்படம் netflix ஓடிடி தளத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லவ் பியாண்ட் விக்கெட் (Love Beyond Wicket)
விக்ராந்த், நியதி காதம்பி, தேனி முருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த தமிழ் ஸ்போர்ட்ஸ் டிராமா வெப் தொடரை 'அ டெலி ஃபேக்டரி' தயாரித்துள்ளது.ஒருகாலத்தில் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், பின்னர் பயிற்சியாளராக மாறி இளம் வீரர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறார் என்பதே கதையின் மையம். கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உணர்ச்சிகரமான கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்த சீரிஸ் சிறப்பான அனுபவமாக இருக்கும். இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஜனவரி 1 ரிலீசாக இருக்கிறது.
ஹக் (Haq)
1985 ஆம் ஆண்டு நடைபெற்ற ஷா பானு வழக்கை அடிப்படையாகக் கொண்ட இந்த ஹிந்தி கோர்ட்ரூம் டிராமாவில் யாமி கௌதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெண் தனது உரிமைக்காக உச்ச நீதிமன்றம் வரை போராடும் பயணம், முஸ்லிம் குடும்பங்களில் நிலவும் திருமண மற்றும் சட்ட சிக்கல்களை மையமாக வைத்து பேசுகிறது. சமூக அக்கறை கொண்ட கதைகளை விரும்புபவர்களுக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இந்த படம் வரும் ஜனவரி இரண்டாம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இத்திரி நேரம்
ரோஷன் மேத்யூ, ஸரீன் ஷிஹாப் நடித்துள்ள மலையாள ரொமான்டிக் படம் 'இத்திரி நேரம்'. பிரசாந்த் விஜய் இயக்கியுள்ள இப்படம், கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் இணையும் ஒரு இரவுப் பயணத்தின் மூலம் வாழ்க்கையில் 'முன்னேறிச் செல்வது' என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது. மென்மையான, ஆழமான கதையமைப்பை விரும்புவோருக்கு ஏற்ற படம். இந்த படம் வரும் டிசம்பர் 31ம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது.
மோக்லி (Mowgli)
ரோஷன் கனகலா, சாக்ஷி மஹ்தோல்கர் நடித்துள்ள இந்த தெலுங்கு ஆக்ஷன் அட்வென்ச்சர் படம்,காடுகளில் வளர்ந்த இளைஞன் ஒருவன் காதல் மற்றும் காவல் துறையின் கொடுமைக்கு இடையே எதிர்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டது. சந்தீப் ராஜ் இயக்கியுள்ள இப்படம் ஆக்ஷன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் ஜனவரி 1ஆம் தேதி ஈடிவி வின் தளத்தில் வெளியாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications