This Week Theatre & OTT Releases: காந்தி டாக்ஸ் முதல் வா வாத்தியார் வரை.. இந்த வார ஓடிடி & தியேட்டர் ரிலீஸ்கள்
சென்னை: திரைப்பட ரசிகர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஸ்பெஷல்தான். தியேட்டருக்குப் போக நினைப்பவர்களுக்கும், வீட்டிலேயே ஓடிடியில் படம் பார்த்து ரிலாக்ஸ் ஆக நினைப்பவர்களுக்கும் தேர்வு குறையவே இல்லை. தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் புதிய படங்களும் தொடர்களும் இந்த வாரம் ரிலீஸாக உள்ளன. அதில் தியேட்டர் ரிலீஸ் என்ன, ஓடிடியில் என்னென்ன வருது என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

தியேட்டரில் இந்த வாரம்
ஜனவரி 30ஆம் தேதி திரையரங்குகளில் நான்கு தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. அதில் கவனம் பெறுவது நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்'. இது ஒரு மெளனப்படம் என்பதே இதன் முக்கிய சிறப்பு. வசனமே இல்லாமல் காட்சிகளின் மூலம் கதையை சொல்லும் முயற்சி தமிழ் சினிமாவில் அரிதானது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
இதற்கு அடுத்து, அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள 'கருப்பு பல்சர்'. கிராமிய பின்னணியில் உருவாகிய இந்த படம், சமூக பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள 'லாக்டவுன்' திரைப்படமும் ஜனவரி 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. கொரோனா கால பின்னணியில் அமைந்த இந்த படம், மனித உறவுகள் மற்றும் மனநிலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன், கிஷோர் நடித்துள்ள 'மெல்லிசை' என்ற சிறு பட்ஜெட் படமும் இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. அமைதியான கதையம்சம் கொண்ட படங்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு தேர்வாக இருக்கலாம்.
OTTயில் இந்த வாரம் முக்கிய ரிலீஸ்
வா வாத்தியார்
இந்த வார ஓடிடி ரிலீஸ்களில் அதிக கவனம் பெற்ற படம் கார்த்தி நடித்த 'வா வாத்தியார்'. நலன் குமாரசாமி இயக்கத்தில், பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வந்த இந்த படம், தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இப்போது, ஜனவரி 28ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் படம் வெளியாகுவதால், ஓடிடியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட 'பிரிட்ஜெர்டன் - சீசன் 4 (பகுதி 1)' ஜனவரி 29 முதல் நெட்ஃபிக்ஸில் வெளியாகிறது. இந்த சீசனில் பெனடிக்ட் பிரிட்ஜெர்டனின் காதல் கதை முக்கியமாக இடம்பெறுகிறது. காதல், குடும்பம், சமூக கட்டுப்பாடுகள் ஆகியவை மையமாக இந்த சீசன் உருவாகியுள்ளது.
ஆவணப்படங்களை விரும்புபவர்களுக்கு 'டேக் தட்' என்ற மூன்று பாக ஆவணத் தொடர் நெட்ஃபிக்ஸில் ஜனவரி 27 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. பிரிட்டனின் புகழ்பெற்ற பாய் பேண்டான 'டேக் தட்' குழுவின் 35 ஆண்டுகால பயணம், அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், மீண்டும் இணைந்த தருணங்கள் என அனைத்தையும் இந்த தொடர் பதிவு செய்கிறது. 90களின் இசையை நேசிப்பவர்களுக்கு இது ஒரு நாஸ்டால்ஜிக் அனுபவமாக இருக்கும்.
ஜனவரி 30க்கு வரும் முக்கிய OTT படங்கள்
துரந்தர்
ஸ்பை ஆக்ஷன் ரசிகர்களுக்காக, ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர்' நெட்ஃபிக்ஸில் ஜனவரி 30 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படம், நிஜ வாழ்க்கை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்படுகிறது.
சாம்பியன்
இதனுடன், ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடித்த 'சாம்பியன்' திரைப்படமும் ஜனவரி 29ஆம் தேதி நெட்ஃபிக்ஸில் வெளியாகிறது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடியிலும் குடும்ப ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தல்தல்
அதே நாளில், பூமி பெட்னேகர் நடித்த 'தல்தல்' என்ற ஹிந்தி க்ரைம் த்ரில்லரும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ஒரு தொடர் கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் மன அழுத்தமே இந்த படத்தின் மையக் கரு.
மேலும், மராத்தி மொழியில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் க்ரைம் தொடர் 'தேவ்கேல்' ZEE5 ஓடிடியில் ஜனவரி 30 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. கடலோர கிராமத்தில் நடக்கும் மர்ம மரணங்கள், நம்பிக்கை - தர்க்கம் என்ற இரு கோணங்களில் கதை நகர்கிறது.
தி ரெக்கிங் க்ரூ
ஆங்கில ஆக்ஷன் ரசிகர்களுக்கு, ஜேசன் மோமோவா மற்றும் டேவ் பாடிஸ்டா நடித்த 'தி ரெக்கிங் க்ரூ' பிரைம் வீடியோவில் ஜனவரி 28 அன்று வெளியாகிறது. ஹவாய் பின்னணியில் அமைந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர், தந்தையின் மரணத்திற்குப் பின் வெளிவரும் ரகசியங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
சர்வம் மயா
மலையாள ரசிகர்களுக்காக, நிவின் பாலி நடித்த 'சர்வம் மயா' ஜனவரி 30 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட இந்த படம், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஓடிடிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் தியேட்டரிலும், ஓடிடியிலும் அனைத்து ரசனைகளுக்கும் ஏற்ற படங்கள் கிடைக்கின்றன. மெளனப்படம் முதல் ஸ்பை த்ரில்லர் வரை, காதல் டிராமா முதல் க்ரைம் சைக்கலாஜி வரை - எதை பார்க்கலாம் என்று குழப்பம் வந்தாலும், தேர்வுகள் நிறைய இருக்கிறது. நீங்க தியேட்டரா, ஓடிடியா... எதை தேர்வு பண்ணப்போறீங்கன்னு தான் இப்போ பெரிய கேள்வி.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications