ஓடிடியில் வெளியான ‘தநா 2026’.. விஜய் லுக்கில் நட்டி… ஆனால் இப்படி சொதப்பி வச்சிருக்காங்களே!
சென்னை: சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'தநா 2026' திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக, நடிகர் நட்டி நடித்திருக்கும் இந்த படம், அவரது விஜய் போன்ற தோற்றம் காரணமாகவே ஆரம்பத்திலேயே கவனம் ஈர்த்தது. ஆனால் இந்த படம் எப்படி இருக்கிறது? இந்த படத்தை ரசிகர்கள் பார்க்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
படம் வெளியாகும் முன்பே, இது அரசியல் பின்னணியில் ஒரு சமூக கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஒரு அளவுக்கு படம் பூர்த்தி செய்தாலும், அதன் கதை சொல்லும் விதம் மற்றும் திரைக்கதை பல இடங்களில் பலவீனமாக இருக்கிறது.

கதை என்ன சொல்கிறது?
'தநா 2026' படத்தின் கதை, வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காக இங்கே வருகிறார் வந்த இடத்தில் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் முதல் படம் வெற்றி அடைந்த பிறகு அவருக்கு அடுத்த படத்தில் பெரிதாக மதிப்பு கிடைக்கவில்லை சாப்பாடுக்கு கூட ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் இருப்பதற்கு இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருக்கு தமிழில் சரளமாக பேசத் தெரியாது என்பது கதையின் முக்கிய அம்சமாக உள்ளது. திரையில் மட்டும் தெளிவாக தமிழில் பேசும் அவர், நிஜ வாழ்க்கையில் ஹிந்தி கலந்த வார்த்தைகளை பேசுகிறார் இதுதான் கேட்பதற்கே நாரகாசமாக இருக்கிறது. நட்டியுடைய நடிப்பும் அவருடைய பேச்சு வழக்கும் ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்த கேரக்டரில் இவர் பேசுவதை கேட்கவே காதை பொத்திக் கொள்ளலாம் என்பது போல இருக்கிறது.
மறுபக்கத்தில் தம்பி ராமையா எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக இருக்கிறார் 1000 ஏக்கருக்கு சொந்தக்காரரான அவர் இந்த ஹீரோவை பற்றி சிலர் சொல்வதைக் கேட்டு அவருடைய படத்தை பார்த்து இவர்தான் இனி அடுத்த எம்ஜிஆர் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். மேலும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நடிகரை ஒரு பெரிய நடிகராக மாற்றுவது தம்பி ராமையா தான். இந்த உறவு தான் படத்தின் சென்டிமென்டாக அமைந்திருக்கிறது.

அரசியல் ஆசை
படத்தின் முதல் பாதியை பார்க்கும் போது படம் போல இல்லை இது ஒரு ஷார்ட் பிலிம் போல துண்டு துண்டாக பிட்டு பிட்டா சேர்த்த மாதிரி தன் பல கதை இருக்கிறது. இரண்டாம் பாதியில், ஹீரோ அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். மக்கள் உணர்ச்சியை பயன்படுத்தி அதிகாரத்தை அடையலாம் என்ற எண்ணம் கதையில் காட்டப்படுகிறது.
இதில் இடம்பெறும் சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. "கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒருவர் அரசியலுக்கு வருவது சேவை செய்ய அல்ல", "காசு வாங்கி ஓட்டு போடுகிறவர்களிடம் நல்ல அரசியல் எதிர்பார்க்க முடியாது"
இந்த வசனங்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மறைமுகமாக சாடுவதாக பார்க்கப்படுகின்றன. ஆனால் அதையே இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்து இருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். அதுவும் குழம்பு, கூட்டு ருசியாக இல்லாமல் சாதத்தை மட்டும் ஏக்கமாக பார்ப்பது போல தான் இருக்கிறது.

பாதியில் தடுமாறும் பயணம்
படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் வேகமாக இருந்தாலும், முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. படத்தின் கிளைமாக்ஸில், ஹீரோ அரசியலில் நுழைந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், கதை வேறு திசைக்கு செல்கிறது.
அவரைச் சுற்றியுள்ளவர்கள் அரசியல் வாய்ப்புகளை பணமாக மாற்ற முயற்சிப்பதை அறிந்த ஹீரோ, திடீரென "உடல்நலக்குறைவு" காரணமாக வெளிநாடு செல்லப் போவதாக கூறி அரசியலில் இருந்து விலகுகிறார். பின்னர் சினிமாவிற்கே திரும்ப முடிவு செய்கிறார். இந்த குழப்பமான முடிவு எதற்காக இந்த படத்தை இவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்த்தோம் என்று யோசிக்க வைக்கிறது.
நட்டியின் முயற்சி
நட்டி ஒரு திறமையான நடிகர் என்றாலும், இந்த படத்தில் அவரது முழு திறமையும் பயன்படுத்தப்படவில்லை. சில காட்சிகளில் அவர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினாலும், மொத்தத்தில் அந்த கதாபாத்திரம் முழுமையாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
'தநா 2026' திரைப்படம், அரசியல் மற்றும் சினிமா இணைந்த ஒரு கருத்தை சொல்ல முயற்சிக்கிறது. ஆனால், அதன் திரைக்கதை மற்றும் முன்னெடுப்பு பல இடங்களில் பலவீனமடைந்துள்ளது.
விஜய் போன்ற தோற்றத்தை பயன்படுத்தி கவனம் ஈர்த்தாலும், கதையின் வலிமை அந்த அளவிற்கு இல்லாததால், படம் ஒரு சாதாரண முயற்சியாகவே முடிவடைந்துள்ளது. நேரம் இருந்தால் ஒருமுறை பார்க்கலாம்... இல்லையெனில் தவறவிட்டாலும் பெரிய இழப்பு இல்லை மக்களே.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications