Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

With Love OTT: ஓடிடிக்கு வரும் “வித் லவ்” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஹீரோவாகவே மாறி ஆச்சர்யப்படுத்தினார். அவர் நாயகனாக நடித்த படம் தான் வித் லவ். இந்த படத்தில் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் தான் இப்போது வெளியாகி இருக்கிறது.

With Love OTT OTT release Abishan Jeevinth

வித் லவ் படம்

இந்தப் படத்தில் அபிஷன் ஜீவித்க்கு ஜோடியாக மலையாளத்தில் இருந்து வந்த அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். இவர்களின் ஜோடி திரையில் புதியதாக இருந்தாலும், இளம் தலைமுறைக்கு நெருக்கமாகத் தோன்றியது. காதல் கதையை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

'வித் லவ்' படம் ஒரு சாதாரண லவ் ஸ்டோரி மாதிரி இல்லாமல், இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், குழப்பங்கள், உறவுகளின் நுட்பங்கள் இப்படி பல விஷயங்களை மெதுவாக சொல்லும் படமாக அமைந்திருந்தது. முதல் பாதி லைட்டாக போக, இரண்டாம் பாதியில் எமோஷனல் கொஞ்சம் அதிகமாகும். அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக இருந்த அனுபவம் அவரின் நடிப்பிலும் தெரிகிறது என்று பலரும் கருத்து சொன்னார்கள்.

இந்தப் படத்தை அபிஷனின் உதவி இயக்குநராக இருந்த மதன் தயாரித்திருக்கிறார். அதோடு சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பிலும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இசையை ஷான் ரோல்டன் அமைத்திருந்தார். பாடல்கள் வெளியானதுமே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காதல் மனநிலையை பிரதிபலிக்கும் மெலடி பாடல்கள் இளைஞர்களிடம் ஹிட்டானது.

வித் லவ் படம் ஓடிடி

திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் இப்போது ஓடிடி வெளியீட்டுக்கும் தயாராகி விட்டது. 'வித் லவ்' படம் விரைவில் Netflix தளத்தில் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் பார்க்க முடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

இயக்குநராக அறிமுகமாகி, உடனே ஹீரோவாக மாறி, அதிலும் காதல் கதையில் நடித்து பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்தின் இந்த முயற்சி பலரிடமும் பேசுபொருளாகி இருக்கிறது. 'வித் லவ்' ஓடிடி ரிலீஸ் ஆன பிறகு இளம் ரசிகர்களிடையே இன்னும் அதிகம் பேசப்படும் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+