Youth OTT: ஓடிடி வந்த யூத்.. கென் கருணாஸின் படத்தை எதில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல்
சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, இப்போது அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், குறிப்பாக இளைய தலைமுறையிடம் பெரிய ரீச் அடைந்தது.

கருணாஸின் மகன்
சினிமாவில் நெப்போ கிட்ஸ் என்ற பேச்சு எப்போதும் இருந்தாலும், திறமை இருந்தால் தான் நிலைத்திருப்பது சாத்தியம் என்பதை நிரூபிக்க முயற்சி செய்தவர்களில் கென் கருணாஸும் ஒருவர். நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் மகனான கென், சிறுவயதிலிருந்தே சினிமாவில் இருந்தாலும், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்தது தான் அவருக்கு பெரிய அடையாளம் கொடுத்தது.
முட்ட கலக்கி கொடுத்த பிரபலம்
அதன் பிறகு நடிப்பில் தொடர்ந்து வளர்ச்சி காட்டிய அவர், 'யூத்' படத்தின் மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபிக்க முயற்சி செய்துள்ளார். இந்த படத்தின் ஹைப் ஆரம்பத்தில் அதிகமாக இல்லை. ஆனால் 'முட்ட கலக்கி' பாடல் வெளியான பிறகு தான் படம் பற்றி பெரிதாக பேச ஆரம்பித்தார்கள். சமூக வலைதளங்களில் அந்த பாடல் வைரலாக பரவியது. அதுவே படத்தை நேரடியாக ஆடியன்ஸிடம் கொண்டு சென்ற முக்கிய காரணமாக அமைந்தது.
யூத் படம்
படம் மார்ச் 19-ம் தேதி வெளியானதும், எதிர்பார்த்ததை விட நல்ல ஓப்பனிங் கிடைத்தது. பள்ளி, கல்லூரி வயதுக்குரிய காதல், பிரேக்கப், மீண்டும் காதல் போன்ற விஷயங்களை லைட்டாகவும், கலகலப்பாகவும் காட்டியிருந்ததால், யூத் ஆடியன்ஸுக்கு படம் எளிதாக கவர்ந்தது. இதன் காரணமாகவே படம் தொடர்ந்து நல்ல ஓட்டம் பெற்றது.

யூத் வசூல் நிலவரம்
வசூல் நிலவரத்தை பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு தெலுங்கு பதிப்பு 10 கோடி, வெளிநாடுகளில் 11 கோடி என மொத்தத்தில் உலகளவில் 80 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. பெரிய படங்கள் இல்லாத சூழ்நிலையும் இதற்கு ஒரு பிளஸ் ஆக அமைந்தது. இதனால் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக 'யூத்' இடம்பிடித்துள்ளது.
யூத் பட கதை
கதையைப் பொறுத்தவரை, படிப்பு சரியாக வராத ஒரு பையன், பள்ளி காலத்திலேயே காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்து அலைவது, பின்னர் ஒரு காதல், அதில் வரும் பிரச்சனைகள், பிரேக்கப், மீண்டும் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்த லைட்-ஹார்ட்டட் அணுகுமுறை தான் படத்தை குடும்பத்துடன் கூட பார்க்கக் கூடிய அளவுக்கு கொண்டு சென்றது.
யூத் ஓடிடி அப்டேட்
தியேட்டரில் நல்ல ரன் முடிவடைந்த நிலையில், தற்போது 'யூத்' படம் ஓடிடிக்கு வர தயாராகி இருக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி முதல் Netflix தளத்தில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுடன் சேர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் ஸ்ட்ரீமிங் ஆகும்.
மொத்தத்தில் பார்த்தால், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த படம், பாடல் ஹைப், யூத் கனெக்ட், சரியான ரிலீஸ் டைமிங் ஆகியவற்றால் வெற்றிப் படமாக மாறி, இப்போது ஓடிடி ரிலீஸ்க்கும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications