அடேங்கப்பா 25 வயதில் இத்தனை படைப்புகளா! தமிழ் எழுத்து உலகின் இளவல் ஜோசன் ரஞ்சித்!
சென்னை: இலக்கியத் தோட்டத்தில் படைப்பு (பூக்)களை தருவிக்கும் இளம் தளிராய் ஜோராய் எழுதிக் கொண்டிருக்கிறார் Jo.Ra. அவர்தான் ஜோசன் ரஞ்சித். 25 வயதில் இத்தனை படைப்புகளா என வியக்க வைக்கிறது அவரது எழுத்துலகப்பயணம்.
காவிரியின் பெருமை பேசும் திருச்சி மாவட்டத்தின் நவலூர் குட்டப்பட்டு என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், திருச்சி மாநகரில் அமைந்திருக்கும் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, வின்சென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்ற சிறப்பு மிக்க கல்வி நிறுவனங்களில் இவர் கல்வித் தேன் பருகியவர். ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்ற போதிலும், தமிழ் எழுத்து நடையும் இவரது எழுதுகோலுக்கு ஆபரணம் சூட்டுகிறது.

கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும் போதே ஒரு பரதேசியின் தொடக்கம் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு இலக்கிய உலகிற்கு தனது வருகையை அறிவித்தவர் ஜோசன் ரஞ்சித். அந்த வயதில் சக இளைஞர்கள் சோஷியல் மீடியாக்களில் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர் விவசாயம், விவசாயிகள் குறித்த ஆழமான இந்த கவிதை தொகுப்பை வெளியிட்டு தனது படைப்புத் திறனுக்கு அடித்தளம் இட்டார்.
தமிழில் மட்டும் 'ஒரு பரதேசியின் தொடக்கம்', 'சரக்கு வச்சிருக்கேன்', 'அன்பு உடன்பிறப்பே', 'நழுவி நழுவி' போன்ற பல படைப்புகளை கொடுத்து தமிழ் இலக்கிய உலகின் இளவரசனாக உலா வருகிறார் ரஞ்சித். தாய்த் தமிழின் தங்க மகனாக மிளிரும் அதேநேரம், ஆங்கில இலக்கிய பட்டதாரி என்பதை அங்குலம் அங்குலமாக நிரூபிக்கும் விதமாக unseen shadow-closer pace with divine, written By-A selfie with life, untitled-an idiosyncratic creativity போன்ற அறிவு ததும்பும் படைப்புகளை வெளியிட்டு ஆங்கில புலமையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
இவர் எழுதிய "மெட்டாமர் போசிஸ்" எனும் ஆங்கில கவிதைப்புத்தகம் அண்மையில் டெல்லியில் வெளியிடப்பட்டது.மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் பங்கேற்ற நிகழ்வில் இவரது பெருமை நிலை நாட்டப்பட்டது. இந்த விழாவில் '2024 ஆம் ஆண்டின் ஊக்கமளிக்கும் எழுத்தாளர்' என்ற விருதும் ஜோசன் ரஞ்சித்திற்கு வழங்கப்பட்டது.
25 வயது இளைஞர்கள் பலர் எந்தத் துறையில் பயணிப்பது என குழம்பிக்கொண்டிருக்கும் சூழலில், இவரோ எழுத்துலகில் பல சுற்றுகள் வலம் வந்து விட்டார். 15 வயதில் கூட விளையாட்டுத்துறையில் ஒருவர் பட்டம் வாங்கி விடலாம்; 21 வயதில் ஒருவர் பொறியாளர் ஆகிவிடலாம்; 22 வயதில் ஒருவர் மருத்துவராகி விடலாம்; ஏனென்றால் இதற்கெல்லாம் ஆட்டத்திறமையும், பாடப்புத்தகங்களும் போதும். ஆனால் இத்தனை இளம் வயதில் ஒருவர் எழுத்தாளர் ஆவது அத்தனை சுலபமல்ல.
இதற்கு புத்தகங்களை தாண்டி சமூகத்தை படிக்க வேண்டும்; சக மனிதர்களைப் படிக்க வேண்டும்; விசாலப் பார்வையால் உலகத்தை விழுங்க வேண்டும்; அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை ஆராய வேண்டும்; கருத்து முரண்களை உள்வாங்க வேண்டும்; இவற்றையெல்லாம் செய்து முடிப்பதற்கு வயது வேண்டும்; அப்போதுதான் ஒரு எழுத்தாளன் எழுதுகோலுக்கு எஜமானன் ஆக முடியும். அதை செய்து காட்டி இருக்கிறார் ஜோசன் ரஞ்சித்.
இங்கே JO.RA என்ற பெயரில் ஜோராக எழுதிக் கொண்டிருக்கும் ஜோசன் ரஞ்சித், தனது பள்ளிப் பருவத்திலேயே உலக நடப்புகளை அள்ளிக் குடித்திருக்கிறார். அதனால்தான் ஒரு தேனீர் பருகும் நேரத்தில் அடுத்தடுத்த படைப்புகளை கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் Rally எனப்படும் சர்வதேச ஆங்கில மாத இதழ், அருள்மொழி எனப்படும் தமிழ் மாத இதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் கட்டுரைகளை எழுதிக் குவிக்கிறார். மேலும் செய்தி சார்ந்த பல நிறுவனங்களுக்கு content எனப்படும் ஏராளமான பதிவுகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
கருத்து மிகுந்த பல கருத்தரங்குகளில்.. மாநாடுகளில்.. பல கட்டுரைகளையும் இவர் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு அதாவது தனது 19 ஆம் வயதிலேயே விஐடி கல்வி நிறுவனத்தின் கருத்தரங்கு ஒன்றில் ஜோசன் ரஞ்சித் கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். இதே போல் பல்கலைக்கழக அளவிலான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல கருத்தரங்குகளில் ஜோ.ர.வின் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு எழுத்தாளன் தான் சமூகத்தை நேசிக்க முடியும்; சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன் தான் படைப்பாளியாக உருவாக முடியும் என்பதற்கு ஏற்ப எழுத்தாளராக மட்டுமின்றி, சமூக ஆர்வலர், மனிதநேயர், கவிஞர் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கிறார் ஜோ.ர. அதனால்தான் இத்தனை இளம் வயதிலேயே அவர் தனது படைப்புகளுக்காக பல கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். Bombay's record Book, Kingdom of talent world reward book போன்ற சாதனையாளர் நிறுவனங்களால் கௌரவிக்கப்பட்ட பெருமையும் JO.RA.வுக்கு உண்டு.
இவை மட்டுமின்றி கடந்த 2019 ஆம் ஆண்டில், சர்வதேச கலாம் கோல்டன் விருது, 2021 ஆம் ஆண்டில் சர்வதேச கல்வி விருது மற்றும் 2021 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆசியா டுடே என்ற நிறுவனம் வழங்கிய தமிழகத்தின் இளம் ஐகான் என்ற விருதும் ஜோசன் ரஞ்சித்தின் திறமைக்கு மகுடம் சூடி இருக்கின்றன.
மாநில அளவிலும் அப்துல்கலாம் விருது, கவியரசு கண்ணதாசன் விருது போன்றவை ஜோரவின் வசமாகி இருக்கின்றன. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற உலக எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழகத்தின் சார்பில் பிரதிநிதியாக பங்கேற்ற பெருமையும் ஜோசன் ரஞ்சித்திற்கு உண்டு. இத்தனை அற்புதங்களை சத்தமில்லாமல் செய்திருக்கும் இவருக்கு இலக்கிய உலகில் மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications