Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ்.. கதை உருவாக்கமும், அதன் வெளிப்பாடும்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தி கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ் திரைப்படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில், திரைக்கதை எப்படி உருவானது? அது எப்படி திரைப்படமாக மாறியது என்பது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

வார்னர் பிரதர்ஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இந்த படம் ஜேம்ஸ் வான் மற்றும் பீட்டர் சாஃப்ரனின் கான்ஜூரிங் தொடரின் இறுதி அத்தியாயம். முதல் படத்திலிருந்து தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த இறுதி படப்பிடிப்பை லண்டனில் பார்க்கிறேன். இதை இயக்கும் மிகேல் சாவ்ஸ், ஸ்மர்ல் குடும்பத்தின் உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட கதை. 1974 முதல் 1989 வரை அவர்கள் சந்தித்த பேரனார்மல் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது எட் மற்றும் லொரைன் வாரனின் வாழ்க்கைப் பயணத்தையும் முடிக்கிறது.

The Conjuring movie

முதல் படம் எடுக்கும்போது லொரைன் அருகில் இருப்பது மிகவும் முக்கியம். அவரின் உயிர்ப்பும் உற்சாகமும் நான் படம் முழுவதும் கையாள விரும்பினேன் என்கிறார்" வான்.

ஸ்மர்ல் குடும்பத்தை எட்டு பேராகக் காட்டுகிறார்கள். சிறிய, நிழல் நிறைந்த வீட்டின் மேடை அமைப்பில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். இதில் ஒரு குடும்ப கொண்டாட்டம் போல உணர்ச்சி வருகிறது, ஆனால் அதில் அச்சமும் மர்மமும் கலந்துள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் பீட்டர் சாஃப்ரன் கூறுகையில், "இந்த இறுதி அத்தியாயம் ஸ்மர்ல் வழக்கை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நீண்ட நாளாகத் தெரியும., எங்கள் எழுத்தாளர் டேவிட் லெஸ்லி ஜான்சன்-மக் கோல்ட்ரிக் மிகச் சிறந்த யோசனையைத் தந்தார். மக்களை பயமுறுத்துவதோடு அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று கூறியிருக்கிறார்.

"இது எட் மற்றும் லொரைன் வாரனின் கதையின் முடிவு. அவர்களின் வாழ்க்கைக்கு நிறைவாகவும் உணர்ச்சிவசப்படுத்துமாறும் நான் முடிக்க விரும்பினேன். அதே நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பயமுறுத்தலையும் கொடுக்க வேண்டும்" என மிகேல் சாவ்ஸ் கூறுகிறார்.

ஜேம்ஸ் வான் கூறுகையில், "இந்த பத்து வருடங்களில் கான்ஜ்யூரிங் தொடர் படங்கள் மூலம் மூலம் பல நல்ல நண்பர்களை அடைந்துள்ளேன். சினிமா எளிதானது அல்ல; ஆனால் ஒரே மனநிலையுடையவர்களுடன் வேலை செய்வதே உண்மையான மகிழ்ச்சி" என தெரிவித்திருக்கிறார்.

வேரா ஃபார்மிகா (லொரைன்) மற்றும் பேட்ரிக் வில்சன் (எட்) பற்றி வான் பெருமையாகக் கூறுகிறார். "அவர்கள் மிகவும் திறமையானவர்களும் எளிதாகச் சேர்ந்து பணிபுரிபவர்களும் ஆவர். அவர்களுடன் தொடர்ந்து வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது." என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

ஃபார்மிகா கூறுகையில், "12 வருட அனுபவத்தின் இறுதியில் இந்தக் கதாபாத்திரத்தை முடிப்பது உணர்ச்சிமிக்கதாக உள்ளது. ஜேம்ஸ் வான், மிகேல் சாவ்ஸ், மற்றும் பேட்ரிக் வில்சன் எனது குடும்பத்தின் உறுப்பினர்கள்" என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

"இந்தப் படம் 12 ஆண்டுகள் தொடரும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் ரசிகர்களின் ஆதரவால் மூன்று அன்னபெல்ல்கள், இரண்டு நன்ஸ், நான்கு கான்ஜ்யூரிங்குகள் வந்துள்ளன. அதற்குக் காரணம் ரசிகர்களே. இந்த படத்தில் புதியதாக, எட் மற்றும் லொரைன் மகள் ஜூடி வாரன் மையக் கதாபாத்திரமாக வரும். இந்த கதாபாத்திரத்தில் மீயா டாம்லின்சன் நடித்துள்ளார். ஜூடியின் மர்மமான பின்னணியை ஆராய்வது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்." என வில்சன் கூறியுள்ளார்.

மீயா டாம்லின்சன் இது பற்றி கூறுகையில், "ஜூடியின் கதாபாத்திரத்தில் நிறைய ஆர்வமும் மர்மமும் உள்ளது. இந்த பாத்திரத்தை ஆராய்வது எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது. பென் ஹார்டி, ஜூடியின் காதலனாக நடிக்கிறார். அவர் முன்னாள் காவல்துறை அதிகாரி, எட் மற்றும் லொரைனின் மகளுக்கு தகுதியானவர் என்பதை நிரூபிக்க விரும்புகிறார். இந்தக் கதையில் அவர்கள் ஓய்வு பெற்ற பின் முதல் வழக்கிற்குத் திரும்புகிறார்கள். அந்த வழக்கு அவர்களின் வாழ்க்கையின் தொடக்கத்தோடு இணைந்துள்ளது.

அவர்கள் எதிர்கொள்ளும் பொருள் ஒரு பெரிய பழமையான கண்ணாடி. அதில் மூன்று குழந்தை முகங்கள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடி படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

மிகேல் சாவ்ஸ் கூறுகையில், "இந்தக் கண்ணாடி பெற்றோர் மற்றும் குழந்தையின் பிரதிபலிப்பைப் போலவே இருக்கிறது. குழந்தைகள் எப்போதும் எதிர்பாராத விதத்தில் நம்மை பிரதிபலிக்கிறார்கள். அதைச் சொல்ல கண்ணாடி சரியான சின்னமாக இருந்தது. கடைசியில், ஸ்மர்ல் குடும்பம், வாரன்ஸ், ஜூடி, டோனி ஆகியோர் அனைவரும் சேர்ந்து சவால்களை எதிர்கொள்கின்றனர். இதனால் படம் ஒரு குடும்பக் கதையாகவும், வாரன்களின் மரபை நிறைவு செய்யும் வகையிலும் முடிகிறது.

பீட்டர் சாஃப்ரன் கூறுகையில், "முதல் படம் எடுக்கும்போது ஒரு சிறந்த அமானுஷ்யத் திரில்லரை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இப்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த உலகின் வெற்றி எட் மற்றும் லொரைன் வாரனின் குடும்பக் கதையில் இருக்கிறது என்பதை பெருமையாகச் சொல்கிறேன். படப்பிடிப்பு முடிவில், லொரைனின் ஆவி பற்றிய வானின் வார்த்தைகள் என் மனதில் மீண்டும் ஒலிக்கிறது. அந்த உணர்வு இன்னும் நிலைத்திருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

இறுதியாக ஜேம்ஸ் வான் கூறுகையில், "இப்போது முடிவுக்கு வருவது சற்றுக் கவலையளிக்கிறது. ஆனால் எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு உண்டு." என்று முடித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+