படுத்தி யெடுக்கும் வெள்ளைப்பாடு.. பிசிஓடி இருப்பவர்கள் இதை மட்டும் சாப்பிடாதீங்க! வாவ் கழற்சிக்காய்
சென்னை: பெண்களைபாடாய் படுத்தும் வெள்ளைப்படுதல் மற்றும் பிசிஓடி என்றால் என்ன? இந்த வெள்ளைப்படுதலுக்கு எளிய தீர்வு என்ன? வெள்ளைப்போக்கு பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய முடியுமா? பிசிஓடி பிரச்சனைக்கு இயற்கையிலேயே மருத்துவ முறைகள் உள்ளனவா? பிசிஓடி அதிகமானால் ஏற்படக்கூடிய உபாதைகள் என்னென்ன? கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு தேவையான உணவு என்ன? தவிர்க்க வேண்டிய உணவு என்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவத்தையே, வெள்ளைப்படுதல் என்கிறோம். வெள்ளை மட்டுமின்றி, மஞ்சள், சாம்பல், பச்சை, பழுப்பு போன்ற நிறங்களிலும் திரவம் வெளியேறும்.

பிறப்புறுப்பு தொற்றுக்கிருமிகள்
பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பைப் பாதித்தால், அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாறும்.. நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். தண்ணீர் போல வெள்ளைப்படுதல் இருப்பதைவிட கெட்டியாக காணப்படும் வெள்ளைப்படுதலே ஆபத்தான நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்சனை ஏற்படலாம். பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவிவிடும்..
வெள்ளை நிற திரவம்
இந்த வெள்ளை திரவம் உடலுக்குள் பல்வேறு நோய் தொற்றுகளை உண்டுபண்ணி, துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.. சொரி, அரிப்பு, நமைச்சல் போன்ற சரும வியாதிகளையும் ஏற்படுத்திவிடும்.. எனவே, அளவுக்கு அதிகமான வெள்ளைப்போக்கு, வயிற்றுவலி, ரத்தப்போக்கு இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
அதேபோல, இளம்பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்ற சொல்லக்கூடிய பிசிஓடி பிரச்சனைகளும் சமீபகாலமாக பெருகி வருகின்றன.. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறைவதால், பெண்களுக்கு உடலில் குறைவதாலும், ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக சுரப்பதாலும், சினைப்பையில் சின்ன சின்ன நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
ஹார்மோன் குறைபாடுகள்
இந்த ஹார்மோன் குறைபாடு காரணமாக, முகத்திலும், உடல், வயிறு பகுதிகளிலும் முடிகள் வளர்கின்றன.. அளவுக்கு அதிகமாக உடல் எடை அதிகரிப்பது, தலைமுடி கொட்டுவது, சீரற்ற மாதவிடாய் போன்ற இன்னல்களும் சேர்ந்துவிடும். இந்த பிசிஓடி பிரச்சனையை அலட்சியப்படுத்தினால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். அந்தவகையில், வெள்ளைப்படுதல் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை சீராக எத்தனையோ மருத்துவ முறைகள் உள்ளதால், மருத்துவர்களை உடனடியாக சந்திக்க வேண்டும்..
வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதும், தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடிப்பதும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வை தரும்.. அதேபோல, காசினிக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளவேண்டும்..
காசினி பவுடர் - நன்னாரி தாவரம்
அல்லது காசினி பவுடரை தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காசினி பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலோ வெள்ளைப்படுதல் மட்டுப்படும். வெள்ளைப்பாடு பிரச்சனைக்கு நன்னாரியின் இலை, வேர் மிகவும் உபயோகமாகும்.. எனவே, நன்னாரி தாவரத்தையே நெய்யில் வதக்கி, மிளகு, இந்துப்பு, புளி சேர்த்து துவையலாக்கி சாப்பிடலாம். வெறுமனே தண்ணீருக்கு பதில், வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்து வரலாம். அல்லது நீரில் கொய்யா இலைகளை கழுவி சேர்த்து கொதிக்க வைத்தாலும் வெள்ளைப்போக்கு குறையும்..
வெள்ளை பூசணி பலன்கள்
வெள்ளை பூசணிக்காய் விதைகளை காயவைத்து, தூள் செய்து 1 ஸ்பூன் பாலில் கலந்து குடிக்கலாம். இந்த விதைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடலாம். இதெல்லாம் ஆரம்ப கட்டத்தில் அல்லது முன்கூட்டியே செய்து கொள்ள உதவுமே தவிர, நாள்பட்ட வெள்ளைப்படுதல் அல்லது மோசமான வெள்ளைப்படுதல் என்றால் மருத்துவரைதான் அணுக வேண்டும்.
அதேபோல பிசிஓடி தொல்லைக்கு கழற்சிக்காய் என்ற இயற்கை மருந்து உபயோகமாகிறது. கச்சக்காய், தெலுக்காய் என்று சொல்லக்கூடிய இந்த கழற்சிக்காயில் உள்ள பருப்புகளை உடைத்து காயவைத்து அரைத்து, தூளாக்கி கொள்ள வேண்டும். அதனுடன் கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இதனை தினமும் 2 வேளையும், 2 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தாலே, கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் கரைய துவங்கும்.
கழற்சிக்காய் சூரணம்
அல்லது நாட்டுமருந்து கடைகளில், கழற்சிக்காய் சூரணம் என்றே தனியாக விற்பார்கள். அதில் 5 கிராம் எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 2 மாதம் குடித்தால், சினைப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகள் கரைந்து ஹார்மோன் பிரச்சனையும் சீராகும்.
லவங்கப் பட்டையை வைத்தும் இதற்கு தீர்வு காணலாம்.. லவங்கப்பட்டையை பிசிஓடி மட்டுமல்ல பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கும பெருமளவில் உபயோகம் தரக்கூடியது. அதேபோல, உடல் எடை குறைந்தாலே பிசிஓடி குறையும் என்பார்கள்.. அப்படி உடல் எடை குறைய வேண்டுமானால் செரிமானம் நன்றாக இருக்க வேண்டும். இதற்கு நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகள் உதவுகின்றன.. நார்ச்சத்து மட்டுமல்லாமல் ஒமேகா-3, ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட்,புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால், பிசிஓஎஸ், பிசிஓடி தொந்தரவுக்கு மருந்தாக பயன்படுகின்றன.
பேக்கரி உணவுகள் தவிர்க்கலாம்
பிசிஓடி பிரச்சனை இருந்தால், மைதா, சர்க்கரை, பிரெட், நாண், பிஸ்கட், ரீஃபைண்டு கோதுமை, கொழுப்புள்ள பால், தயிர், சீஸ், வெண்ணெய், மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முந்திரி, திராட்சை, பிஸ்தா, பேக்கரி உணவுகள், ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ், பஜ்ஜி, போண்டா, சமோசா, சிப்ஸ், உள்ளிட்ட எண்ணெய்யில் பொரித்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக, பழுப்பரிசி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, வரகு, கோதுமை, பார்லி போன்றவற்றை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. பழங்களில், பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பயிறுகளில் முளைகட்டிய பயறு, பருப்பு வகைகள் சாப்பிடலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
அதேபோல பொரியலில், புரொக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான், பீன்ஸ், வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் மற்றம் நீர்க்காய்கள், புடலங்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய், சுரைக்காய், போன்றவற்றையும் சாப்பிடலாம், தக்காளி அதிகம் சேர்க்கலாம்.
எனினும், வெள்ளைப்போக்கு, பிசிஓடி போன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டாலும்கூட, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, "பேப்ஸ்மியர்" டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும்.. 21 வயதிற்கு மேல் உள்ள அனைத்து பெண்களுமே, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.. கர்ப்பப்பை வாய் கேன்சர் தடுப்பூசிகளும் உள்ளதால், எந்த வயது பெண்களும், இதை போட்டுக் கொள்ளலாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications