டோக்கியோ ஒலிம்பிக் 2021: நான்கு தமிழக விளையாட்டு வீரர்கள் தேர்வு
சென்னை: டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக, தமிழ்நாட்டின் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில், செல்வி. சி.ஏ.பவானி தேவி, (வாள் சண்டை), திரு.எ.சரத் கமல், திரு.ஜி.சத்தியன் (மேசைப் பந்து), திரு.கே.சி.கணபதி (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய நான்கு விளையாட்டு வீரர்களும் தேர்வாகி உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசால், தமி்ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டத்திலும், (Special Scholarship Scheme for Elite Sportspersons) மற்றும் திரு.வருண் எ.தக்கர், செல்வி. நேத்ரா குமணன் (பாய்மரப் படகோட்டுதல்) ஆகிய இருவரும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திலும் (Mission International Medal Scheme) பயனாளிகளாக உள்ளனர்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவைகளில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றல், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகள், அயல்நாடுகளில் பயிற்சிகள், இதர வசதிகளுக்காக அவர்களின் தேவைக்கேற்ப ஆண்டொன்றுக்கு முறையே ரூ.25,00,000 மற்றும் ரூ.10,00,000 வீதம் தமிழ்நாடு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் 2021 விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்கள் வெல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications