சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
மினசோட்டா: வட அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்படுகிறது. இப்பொங்கல் விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இது தொடர்பாக மினசோட்டா தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கம், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினையும், தமிழ்ப் புத்தாண்டினையும் கொண்டாடும் வகையில், சங்கமம் விழாவாக கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடி மகிழ்வோம். அந்த வகையில் வரும் சனவரி 24 ஆம் தியதி, ஞாயிற்றுக் கிழமை பகல் 10 மணி முதல் இணையம் வழியாக கொண்டாட திட்டமிட்டோம்.
இந்நிகழ்வில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

சங்கமம் - 2021 விழா சிறப்புகள்:
கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் முழுவதும் "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். அந்த அறிவிப்பு குறித்து அதிகார சபை அங்கத்தினரான(Senator) திரு.ஜான் காஃமென் நேரலையில் கலந்து கொள்கிறார்.
Rina Rossi - MSAB - Arts Connect, Corinne Ertz - Development Director நேரலையில் கலந்து கொள்கிறார்கள்.
இசை முழக்கம் - திரு.பெரிய மேளம் முனுசாமி குழுவினரின் இசை முழக்கம்.
தெருக்கூத்து - இயக்குனர் திரு.சங்ககிரி ராஜ்குமார் குழுவினரின் "குமண வள்ளல்" தெருக்கூத்து
விழிப்புணர்வு நாடகம் - மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நடிக்கும் விழிப்புணர்வு நாடகம் - யாருப்பா மாறனும்?
மினசோட்டா கலைக்குழுவினரின் - பறையிசை, தவில், நாகசுவரம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை பங்கு பெரும் - ஆடல், பாடல் எண்ணற்ற கலை நிகழ்ச்சிகள்.
விருந்தினர்களாக பல கலைஞர்கள், பெரியவர்கள் - வாழ்த்துச் செய்தியுடன் கலந்து கொள்கிறார்கள்.
2021 - தமிழ் மொழி மற்றும் மரபு மாத அறிவிப்பு
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தை "தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக" கொண்டாடும் வகையில் மினசோட்டா மாநில ஆளுநர் திரு.டிம் வால்ச் அரசு முத்திரையுடன், கையெழுத்திட்டு பிரகடனம் செய்துள்ளார். வட அமெரிக்காவில் ஒரு மொழிக்கும் அதன் மரபுக்கும் மினசோட்டா மாநில அரசால் முதல் முறையாக, ஒப்புமை பெற்று, அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மொழி என்றால் அது நமது தமிழ் மொழிக்கே ஆகும். கடந்த ஆண்டு (2020 சனவரி) முதல் முறையாக நாம் பிரகடனம் கிடைக்கப்பெற்றோம். அதனைத் தொடர்ந்து வரும் 2021 சனவரி மாதத்திற்கும் பெற்றிருக்கின்றோம்.
நமது தமிழ் மொழி, கலை, வரலாறு, பண்பாட்டுச் சிறப்பு அது சார்ந்து நாம் தொடர்ந்து ஆற்றி வரும் பணிகள் குறித்தும், நமது தமிழ் மாணவர்கள் பெற்ற இருமொழி முத்திரை மற்றும் அவர்களுக்காக நாம் ஏற்படுத்திய கல்வி ஊக்கத்தொகை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நமது தமிழ்மொழி மற்றும் மரபு குறித்த சிறப்புகளை, இந்த மாநில, மற்றும் பிற மாநில மக்கள், பிற மொழி பேசும் இனத்தவர்கள், அனைவரும் அறிந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி ஊடகங்களால், நாடெங்கும் சென்றடைந்துள்ளது. இது போன்ற அரசு அங்கீகாரங்கள் மற்றும் வாழ்த்துகள், நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும், தமிழ் மொழியின் சிறப்பையும், பெருமையையும் கொண்டு சென்று, அது குறித்த நம்பிக்கையளிக்கும் என்பதும், உலகமெங்கும் உள்ள தமிழ்ப் பற்றாளர்களை மேலும் தமிழுக்காகத் தொண்டாற்ற ஊக்கமளிக்க வகை செய்யும்.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கமானது தொடர்ந்து 13 ஆண்டுகளாக மினசோட்டாவில் தமிழ் மொழி சார்ந்தும், தமிழ் கலைகள் சார்ந்தும் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாகத் தோல்பாவை கூத்துக் கலைஞர் திரு. அம்மாபேட்டை கணேசன், நாடகக்கலைஞர் திரு. வேலு சரவணன், தமிழிசை கலைஞர் திரு. திருபுவனம் ஆத்மநாதன் ஐயா, திரு. சீர்காழி சிவசிதம்பரம், திரு.புஷ்பவனம் குப்புசாமி, திரு. ஈரோடு தமிழன்பன், திரு. சகாயம் IAS, திரு. மயில்ச்சாமி அண்ணாதுரை, திரு. சிலம்பொலி செல்லப்பனார், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற பல தமிழ் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை, தமிழ் இலக்கியப் பேச்சாளர்களைத் தொடர்ந்து மினசோட்டாவிற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழ் கலைகளை இங்குள்ளவர்கள் கற்றுக்கொள்ளப் பல வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து வந்துள்ளது.

விழா அழைப்பு
இத்தகைய பெருமை மிகு தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்தும் சங்கமம் - 2021 சனவரி 24 - பகல் 10 மணிக்கு நிகழ்வில் நாம் அனைவரும் மறவாமல் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழுமாறும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
Promo Link - https://youtu.be/dJHnZQnLxWI
Event Live Link - Https://youtu.be/cIUQ74Zcawk
இவ்வாறு மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications