ஆதியோகி முன் ராம நாமம்!.. ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளால் ஜொலித்த "ஜெய் ஸ்ரீ ராம்"
கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவையில் ஆதியோகிக்கு முன்பு "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது.
அயோத்தியில் பால ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாடு முழுவதும் பல ஊர்களில் நேரலையில் அமர்ந்து பால ராமரை தரிசனம் செய்தனர்.

பிராணப் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு ராம ஜோதியை ஏற்றிக் குழந்தை ராமரை வரவேற்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில், "குழந்தை ராமர் இன்று அயோத்தி தாமில் உள்ள தமது பிரமாண்டமான ஆலயத்தில் அமர்ந்துள்ளார். இந்தப் புனிதமான சந்தர்ப்பத்தில், ராம ஜோதியை ஏற்றி, தங்கள் வீடுகளிலும் அவரை வரவேற்குமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஸ்ரீராம்!" என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.

நாடு முழுவதும் ராமரை வணங்கும் மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டனர். கோவையில் ஆதியோகி முன்பு அகல் விளக்குகளால் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இந்த வரலாற்று வைபவத்தை கொண்டாடும் வகையில் கோவை ஆதியோகிக்கு முன்பு "ஜெய் ஸ்ரீ ராம்" மந்திரம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. ஆதியோகியின் அற்புத இருப்பின் முன் ஜெய் ஸ்ரீ ராம் - அகல் விளக்கு அலங்காரத்தின் டிரோன் காட்சிகள் கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications