மண்ணில் பிறந்து மண்ணுக்கு செல்கிறோம்.. நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்.. ஐநாவில் சத்குரு உரை
துபாய்: நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது என்று சத்குரு கூறியுள்ளார்.
துபாயில் தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய சத்குரு, நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல என்று கூறினார்.

நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். மண் தான் நம்மை முழுமையாக ஒருங்கிணைக்கிறது என்றார் சத்குரு.
மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றத்தையும், மண் புத்துயிர் பெறுவதற்கான கொள்கைகளை செயல்படுத்துவதிலும் நம்பிக்கைத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும்" என்று கூறினார்.
இந்த மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் காலநிலை அமைச்சர் மரியம் அல்மெய்ரி, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications