சட்டசபை தேர்தல்: சென்னையில் இருந்து ஏப்.1 முதல் 5 நாட்களுக்கு 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 01.04.2021 முதல் 05.04.2021 வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என ஆகமொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 01.04.2021 முதல் 03.04.2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
விடுமுறை நாளான ஞாயிறு (04.04.2021) மற்றும் திங்கட்கிழமை (05.04.2021) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று, பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்து நிலையம் - ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
கே.கே. நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம்.: புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் - கும்பகோணம், தஞ்சாவூர், (வழி) விக்கிரவாண்டி,பண்ருட்டி.
ஆ) தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்- திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுhர், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலுhர், சிதம்பரம் செல்லும் ருந்துகள்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்- வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதிசெல்லும் பேருந்துகள்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு- மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்துர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர்,திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம்,கோயம்புத்துhர் மற்றும் பெங்களூர்)
தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 06.04.2021 முதல் 07.04.2021 வரை தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூருக்கும், சேலம், திருண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications