அபரிமிதமான வளர்ச்சி பெறும் திருவள்ளூர்.. பல்வேறு தொழில் திட்டங்கள்.. புதிய சென்னையாக மாறுகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் துறை வளர்ச்சி திட்டங்களால், அடுத்த 10 ஆண்டுகளில் புதிய சென்னையாக திருவள்ளூர் மாவட்டம் உருவெடுக்க போகிறது. சி.எம்.டி.ஏவும், திருவள்ளூர் மாவட்டம் தான் அடுத்து பெருமளவு வளர்ச்சியை பெறும் என்று கூறியுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் ஒரு பெரிய மாற்றத்திற்கான பயணத்தை திருவள்ளூர் தொடங்கியுள்ளது. அபாரமான வளர்ச்சிக்கு தயாராக இருக்கும் திருவள்ளுர், வரவிருக்கும் ஆண்டுகளில் அப்பகுதியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசின் பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏவின் 3-வது மாஸ்டர் பிளான் என்ன சொல்கிறது என்றால் திருவள்ளூர் மாவட்டம் தான் அடுத்து பெருமளவு வளர்ச்சியை பெறும் என்று கூறியுள்ளது.

 Tiruvallur to become the new Chennai: Big plans for industrial development in the next 10 years

எனவே புதிய சென்னையாக திருவள்ளூர் மாறி வருகிறது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் திருவள்ளூரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை வரையறுக்கும் வகையில், தொலைநோக்கு பார்வையுடன் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நாங்கள் வரையறுக்க உள்ளோம்.

துணைக்கோள் நகருக்கான முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம்:

திருவள்ளூர் எதிர்காலத்தில் துணைக்கோள் நகரமாக மாறும் சாத்தியம் உள்ளது. மன்னுர், கக்கலூர் மற்றும் காட்டுப்பள்ளி துறை முகம் ஆகிய வரவிருக்கும் தொழில்துறை வளர்ச்சி திட்டங்கள், வரவிருக்கும் மாநில நெடுஞ்சாலை, பொருளாதார வளர்ச்சிக்கான கட்டிடம் ஆகியவையால் வளர்ச்சியை பெற உள்ளன. புத்தாக்க மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை திருவள்ளூர் ஊக்குவிக்கும். திருவள்ளூர் திறமை மற்றும் முதலீட்டை ஈர்க்க கூடியதாக மாற்றப்படும். தொழில் நுட்ப மேம்பாட்டிலும் செழித்து வளரக்கூடிய நகரமாக பன்முக பொருளாதாரத்தை உருவக்குவதே இதன் இலக்கு ஆகும்.

திருவள்ளூர் ஏன் புதிய சென்னை?

தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் சாலை பணிகளை விரைவு படுத்த உள்ளது. அதாவது, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர், பெரிஃபெரல் ரிங்ரோட்டில் வரும் ஸ்ரீபெரும்புதூர் - சிங்கப்பெருமாள் கோயில் சாலை ஆகியவற்றில் 6 வழிச்சாலைக்கு வழி ஏற்படுத்தும் விதமாக பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்றாவது 29.55 கி.மீட்டர் திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து ஸ்ரீபெரும்பதூர் என்.எச் 44 வரை உள்ளது.

 Tiruvallur to become the new Chennai: Big plans for industrial development in the next 10 years

திருவள்ளூர் தொழில் வளர்ச்சி:

சென்னையின் அடுத்த பெரிய தொழில் மையாக திருவள்ளூர் மாவட்டம் ஆக உள்ளது. மண்ணூர் தொழிற்பேட்டை, காக்களூர், அதானி காட்டுப்பள்ளி போர்ட் உள்பட பல திட்டங்கள் வர உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா, வெங்கல் கிராமத்தில் 1,424 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நடு நாலேஜ் சிட்டி (TKC) அமைய உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ)மும் அமைய உள்ளது.

புதிய விமான நிலையம்:

காஞ்சிபுரத்தில் உள்ள பரந்துரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. 1,500 ஏக்கர் பட்டா இடமும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களும் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

டைடல் பார்க் -2வது கட்டம்:

பட்டாபிராமில் உள்ள டைடல் பார்க் 30 நிமிட தொலைவில் உள்ளது. 5.57 லட்சம் சதுர அடியில் சென்னையில் புதிய ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் இது அமைகிறது. ஆவடி தாலுகாவில் உள்ள இந்த இடத்தில் 278.84 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2024க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரை போர்ட் (மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்):

திருவள்ளூரில் உள்ள மப்பேடு கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் கட்ட தயாராகி வருகிறது. ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் அருகே இந்த இடம் அமைந்துள்ளது. சென்னை துறைமுக கழகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் இடத்தில் 1,200 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

 Tiruvallur to become the new Chennai: Big plans for industrial development in the next 10 years

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்:

காட்டுப்பள்ளியில் நவீன துறைமுகம் வடசென்னையில் உள்ள காட்டுபள்ளி கிராமத்தில் உள்ளது. பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் காட்டுப்பாக்கம் அமைந்துள்ளது. அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் ஒரு இந்திய பன்னாட்டு துறைமுக ஆபரேட்டர் மற்றும் தளவாட நிறுவனமாகும்.

அதானி குழுமத்தின் துணை நிறுவனமான , APSEZ நாட்டின் மிகப்பெரிய தூறைமுக செயல்பாட்டு நிறுவனமாக உள்ளது. இந்தியாவின் முதல் ஆழமான நீர் பரிமாற்றத் துறைமுகமான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் உள்பட துறைமுகங்களை அதானி குழுமம் வசம் உள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம்:

குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 136 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. விரைவில் வர இருக்கும் இந்த பேருந்து நிலையத்திற்கு வருவதற்கான கூடுதல் சாலைகளை அடையாளம் காணுமாறு சென்னை மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி கழகம் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் கேட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+