புதுச்சேரி: நாராயணசாமியாலும் 5 ஆண்டு முழுமையாக ஆட்சி நடத்த முடியலையே- ரெங்கசாமி மட்டுமே சாதித்தவர்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை ஒரே ஒரு முதல்வர்- என்.ஆர். ரெங்கசாமி மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி காலத்தை நிறைவு செய்தவர். தற்போதைய முதல்வர் நாராயணசாமி கூட ஆட்சி காலத்தில் இறுதியில் பெரும்பான்மையை இழந்து ராஜினாமா செய்யும் நிலைமை உருவாகி உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை 1963-ல் அமைந்தது. அப்போது எட்வர்ட் குபேர் முதல்வராக பதவி வகித்தார். அவர் சுமார் 1 ஆண்டுகாலம்தான் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து 1964 முதல் சட்டசபை தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியின் வெங்கடசுப்பா 2 ஆண்டுகளுக்கு மேல் முதல்வர் நாற்காலியில் இருந்தார்.

இதன் பின்னர் 1967-ல் பாரூக் மரைக்காயர் ஓராண்டுக்கும் குறைவான நாட்கள் முதல்வராக இருந்தார். மீண்டும் வெங்கடசுப்பா 6 மாதங்கள் முதல்வராக இருந்தார். இப்படிதான் புதுச்சேரி முதல்வர் பதவி என்பது தொடக்கம் முதலே சுழல் நாற்காலியாகவே இருந்து வருகிறது.
1968-ம் ஆண்டு 6 மாதங்கள் புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 1969 தேர்தலில் திமுகவின் பாரூக் மரைக்காயர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 1974 வரை முதல்வராக இருந்தார். அவர் ராஜினாமா செய்த நிலையில் 62 நாட்கள் புதுவையில் 2-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த ஜனாதிபதி ஆட்சி கூட 22 நாட்கள்தான் அமலில் இருந்தது. பின்னர் 1974 தேர்தலுக்குப் பின் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி 22 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன்பின் 3-வது முறையாக புதுவையில் 1974-ம் ஆண்டு முதல் 1977 வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி ஆட்சியே இருந்து வந்தது.
1977 தேர்தலுக்குப் பின் மீண்டும் அதிமுகவின் சுப்பிரமணியன் ராமசாமி முதல்வரானார். ஆனால் ஒரு ஆண்டுகாலத்துக்கும் சற்று கூடுதலாகவே பதவியில் அவர் இருந்தார். 1978 முதல் 1980-ம் ஆண்டு ஜனவரி வரை வரை ஓராண்டுகாலம் 4-வது முறையாக புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1980 தேர்தலில் திமுகவின் எம்டிஆர் ராமச்சந்திரன் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்தார். அவர் ராஜினாமா செய்த நிலையில் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சியை எதிர்கொண்டது புதுவை.
1985 தேர்தலில் காங்கிரஸின் பாரூக் மரைக்காயர் மீண்டும் முதல்வரானார். ஏறத்தாழ 5 ஆண்டுகாலத்தை நெருங்கிய காலம் முதல்வராக பாரூக் மரைக்காயர் பதவியில் நீடித்தார்.
1990 தேர்தலில் திமுகவின் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மீண்டும் முதல்வரானாலும் ஓராண்டுதான் அவர் பதவியில் இருந்தார். சுமார் 4 மாதங்கள் புதுவையில் 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1991-ல் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் முதல்வரான வைத்தியலிங்கமும் 5 ஆண்டுகாலத்தை நிறைவு செய்யும் நிலையில்தான் இருந்தார். 1996-ல் திமுகவின் ஜானகிராமன் சுமார் 4 ஆண்டுகாலம் வரை முதல்வராக இருந்தார். அதன்பின்னர் குறுகிய காலம் சண்முகம் முதல்வராக இருந்தார்.
2001 தேர்தலிலும் இதே கூத்துதான் நடந்தது. சண்முகமும் ரெங்கசாமியும் முதல்வர் நாற்காலியில் மாறி மாறி அமர்ந்தனர். 2006 தேர்தலிலும் ரெங்கசாமியும் வைத்திலிங்கமும் மாறி மாறி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர்.
2011-ல் ஆட்சிக்கு வந்த என்.ஆர். ரெங்கசாமிதான் 2016 வரை முதல் முறையாக முழுமையாக 5 ஆண்டுகாலம் முதல்வர் பதவியில் நீடித்தவர்.
2016-ல் ஆட்சிக்கு வந்த தற்போதைய முதல்வர் நாராயணசாமியும் புதுச்சேரி விதிப்படி ஆட்சிகாலம் முடியும் முன்னரே ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications