Chinthamani Chicken: கொங்கு ஸ்பெஷல் காரசாரமான சிந்தாமணி சிக்கன் செய்வது எப்படி தெரியுமா?
How to make chinthamani chicken: கோவை என்றாலே உணவு வகையில் வெஜ் என்றால் முதன்முதலில் நியாபகத்துக்கு வருவது அரிசிம்பருப்பு சாதமும், நான்வெஜ் என்றால் சிந்தாமணி சிக்கனும் தான். எந்தவித மசாலாக்களும் இல்லாமல் சுவையாகவும், காரசாரமாகவும் சட்டென சமைத்து முடிக்கக் கூடிய சிந்தாமணி சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
கொங்குநாட்டு சமையலுக்கென்றே தனி ருசி உள்ளது. வெஜ், நான்வெஜ் எந்த சாய்ஸாக இருந்தாலும் சரி கொங்குநாட்டு உணவு வகைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். அரிசிம்பருப்பு சாதம் முதல் சட்டி வறுவல் வரை அத்தனையும் அல்டிமேட்டாக இருக்கும். அந்த வகையில், கொங்கு ஸ்பெஷல் கோவை மாவட்டத்தின் தனிச் சிறப்புமிக்க காரசாரமான சிந்தாமணி சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - அரை கிலோ
காய்ந்த மிளகாய் விதை நீக்கியது - 15
சின்ன வெங்காயம் - 15
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 3/4 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் அல்லது ஆயில் - 2 குழிக்கரண்டி
சிந்தாமணி சிக்கன் செய்வது எப்படி?
1. முதலில் கோழிக்கறியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
3. பின்னர், கடுகு, சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கிய காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3. சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
4. பின்னர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. நன்றாக வதக்கிய பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
6. தேவையான அளவு மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் நன்கு வேகவிடவும்.
7. சிக்கன் தண்ணீர் வற்றி நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலையைத் தூவி கலந்து இறக்கவும். சுவையான, காரசாரமான சிந்தாமணி சிக்கன் ரெடி.
சூடான சாதத்தில் சிக்கன் சிந்தாமணியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை அற்புதமாக இருக்கும். எந்த மசாலாக்களும் இல்லாமல் குறைந்த பொருட்களில் சட்டென செய்து முடிக்கக் கூடிய இந்த சிந்தாமணி சிக்கனை அடுத்து முறை சமைத்து பாருங்க.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications