Plum Cake Recipe: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம்.. ட்ரை பண்ணி பாருங்க
Plum cake recipe: கிறிஸ்தவ மக்களின் புனிதப் பண்டிகையான கிறிஸ்துமஸ் வரப் போகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிளம் கேக் தான். எத்தனையோ ரக கேக்குகள் மார்க்கெட்டில் இருந்தாலும் பிளம் கேக்கின் சுவைக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த பிளம் கேக்கை வீட்டிலேயே ஈஸியாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
பிளம் கேக் செய்யத் தேவையான பொருட்கள்
மைதா மாவு - 300 கிராம்
நாட்டு சர்க்கரை - 1 கப்
முட்டை - 3
ஆரஞ்சு ஜூஸ் - 2
கோகோ பவுடர் - 1/4 கப்

பட்டைத்தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1 ஸ்பூன்
சுக்குப்பொடி - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - 2 கப்
பேரிச்சம்பழம்
காய்ந்த திராட்சை
காய்ந்த கருப்பு திராட்சை
பாதாம் பருப்பு
முந்திரி
டுட்டி ஃப்ரூட்டி
பிளம் கேக் செய்யும் முறைகள்
1. முதலில் ஆரஞ்சை எடுத்து சாறாகப் பிழிந்து கொள்ளவும். அந்த சாறில் நறுக்கி வைத்துள்ள அனைத்து ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ்களை சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2. மைதா, கோகோ பவுடர், பட்டைத் தூள், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை நன்கு சலித்துக் கொள்ளவும்
3. மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.
4. அதில், வெண்ணிலா எசன்ஸ், பிரவுன் சக்கரை, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும்.
5. அதில் மைதா, கோகோ பவுடர் உள்ளிட்ட கலவையை சேர்த்து கலந்து வைக்கவும்.
6. அந்தக் கலவையில் ஆரஞ்சு பழச் சாறில் ஊற வைத்துள்ள ட்ரை புரூட்ஸ் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. மீதமிருக்கும் ஆரஞ்சு சாறை தேவைப்பட்டால் கடைசியில் கேக்கில் சேர்த்துக் கலக்கலாம்.
8. கேக் செய்யும் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் விரித்து, கேக் கலவையை அதில் ஊற்றிக் கொள்ளவும்.
9. மைக்ரோ ஓவனை 15 நிமிடம் 180 டிகிரி செல்சியஸில் சூடாக்கவும்.
10. பின்னர், கேக் டின்னை வைத்து முக்கால் மணி நேரம் 180 டிகிரி செல்சியல் அளவில் வைத்து வேகவிட்டால் சுவையான பிளம் கேக் தயார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications