Thengai Paal Satham: ஆப்பத்துக்கு தொட்டுக்கறது இருக்கட்டும்! தேங்காய் பால் வைத்து சாதம் செய்யலாமா?
Thengai Paal Satham Recipe: தேங்காய் பாலை ஆப்பத்துக்கும், இடியாப்பத்திற்கும் தொட்டு சாப்பிட்டிருப்பீர்கள், இல்லாவிட்டால் அப்படியே சர்க்கரை சேர்த்தும் குடித்திருப்பீர்கள். ஆனால் அந்த தேங்காய்ப் பாலில் ஒரு சூப்பரான சாதம் செய்யலாம்.

தேங்காய் பால் வயிற்று புண்களை ஆற்றும். வயிறு தொடர்பான பிரச்சினைகளை நீக்கும். தேங்காய் பால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இந்த தேங்காயை அரைத்து அதிலிருந்து பால் எடுத்து அதில் சர்க்கரை, ஏலக்காய் தட்டி போட்டு இடியாப்பத்திற்கும் ஆப்பத்திற்கும் தொட்டு சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த தேங்காய் பாலை வைத்து ஒரு சூப்பரான சாதம் செய்யலாம். தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் பால் - 2 கப்
அரிசி- 1 கப்
வெங்காயம்- 2 நீளவாக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் -2 கீரியது
பிரிஞ்சி இலை - 1
பட்டை - அரை துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு- அரை டீஸ்பூன்
கிராம்பு-3
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கேற்ப
புதினா, மல்லி- ஒரு கைப்பிடி
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிவிட்டு பின்னர் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அதன் பிறகு மல்லி, புதினா தழைகளை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டுக் கொள்ளவும்.
இந்த பொருட்கள் வதங்கும் நேரத்தில் 1 கப் அரிசியை நன்கு கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரிசி பாஸ்மதியாக இருக்கலாம், பச்சை அரிசி, பொன்னி என உங்கள் விருப்பம் போல் எடுத்து ஊற வையுங்கள்.
பின்னர் வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அதையும் வதக்கிவிட்டு தேங்காய் பாலை சேர்க்கவும். அது ஒரு கொதி வந்ததும் அரிசியை தண்ணீரில் இருந்து வடிகட்டி சேர்க்கவும். பின்னர் உப்பு சேர்த்துவிட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும்.
இந்த சூப்பரான தேங்காய் பாலுக்கு வெங்காய ரைத்தா நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் குருமா குழம்பு கூட தொட்டுக் கொள்ளலாம்.
பிரிஞ்சி சாதம் செய்யும் போது 1-க்கு இரு பங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள். அது போல் தேங்காய் பால் சாதத்திற்கும் 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
2 பங்கில் ஒரு பங்கு தேங்காய் பாலும், மற்றொரு பங்கு தண்ணீரையும் கூட சேர்க்கலாம்.
ஒரு வேளை நீங்கள் அரைத்த தேங்காய் பால் ஒன்றரை கப் மட்டும்தான் கொடுத்தது என்றால் மீதி அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications