Kandhar Appam: கந்த சஷ்டி முடிந்தால் என்ன? மழைக்கு இதமா கந்தர் அப்பம் செய்வோமா? எப்படி செய்யுறது?
சென்னை: கந்த சஷ்டி விரத நாட்களில் முருகனுக்கு நெய்வேத்தியம் செய்ய காரைக்குடி செட்டிநாடு ஸ்பெஷல் "கந்தர் அப்பம்" மிகவும் பிரபலம். இது அனைவரும் அறிந்ததே. தற்போது கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று சூரசம்ஹாரம், இன்று திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விரதம் முடிவடைகிறது.
இந்த கந்தர் அப்பம், கந்த சஷ்டி விரத நாட்களில் ஏற்ற ஒரு இனிப்பு பலகாரம் என்கிறார்கள். இதை முருகருக்கு நெய்வேத்தியம் செய்வார்கள். விரதம் முடிந்து விட்டால் என்ன பள்ளி, கல்லூரி முடித்துவிட்டு வீடு வரும் குழந்தைகளுக்கு சூடாக மழைக்கு இதமாக செய்து கொடுக்கலாமே!

ஏன் அலுவலகத்தில் பல டென்ஷன்களுடன் வீட்டுக்கு வரும் உங்கள் கணவன்மார்களையும் இந்த அப்பத்தை வைத்து கவருங்கள்! இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வாங்க!
இந்த அப்பம் செய்ய கடைகளுக்கு சென்று பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டிய தேவை இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
வெல்லம்- அரை அல்லது முக்கால் கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய்- 2
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி குறைந்தது 3 மணி நேரம் ஊற வைத்துவிடுங்கள். இடையில் வெல்லத்தை பொடித்து அதில் கால் கப்புக்கும் குறைவாக தண்ணீர் விட்டு கரையுங்கள். பின்னர் அதை வடிகட்டவும்.
பின்னர் மிக்ஸியில் வாழைப்பழங்களை தோலுரித்து கட் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் ஏலக்காய், ஊறவைத்த அரிசி, வெல்ல கரைசல் ஆகியவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அந்த கலவையில் தேங்காய் துருவலையும் சேருங்கள். இதை பணியாரம் செய்யும் பக்குவத்தில் கரைத்து வைக்கவும்.
மாவை மூடி ஒரு மணி நேரம் அப்படியே விட்டால் அது ஊறி பஞ்சு போல் ஆகும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றுங்கள். மாவை அதில் அப்பம் போல் விட்டு விட்டு இரு பக்கமும் சிவந்ததும் வடிகட்டி எடுத்துவிடுங்கள். சுவையான அப்பம் ரெடி!
முருகருக்கு நெய்வேத்தியம் செய்வதாலும் விரத நாட்களில் இதை சாப்பிடுவதாக இருந்தாலும் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு ஒரு சிட்டிகை சேர்க்க சொல்வதே இனிப்பை தூக்கி கொடுக்கத்தான்! எனவே குழந்தைகளுக்கும் ஸ்னாக்ஸுக்காகவும் நீங்கள் செய்வதாக இருந்தால் உப்பு சேருங்கள், இல்லாவிட்டால் தவிர்க்கலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications