பீர்க்கங்காய் பொரியல், கூட்டு செய்யும் போது தோலை தூக்கி எறியாதீங்க! சூப்பரான துவையல் செய்யலாம்!
சென்னை: பீர்க்கங்காய் பயன்படுத்தும் போது அதன் தோலை தூக்கி தூர எறியாதீங்க, அதை வைத்து ஒரு சூப்பரான துவையல் செய்யலாமா? இதை வைத்து சூடான சாதம், இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
பீர்க்கங்காய் என்பது கொடி வகையிலான காய்கறியாகும். இதை வைத்து கூட்டு, பொரியல் செய்யலாம். இந்த பீர்க்கங்காயின் தோல் முறைப்பாக இருக்கும் என்பதால் தோலை சீவிவிட்டுதான் பயன்படுத்த வேண்டும்.

பீர்க்கங்காய் சட்டென சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் இதற்கு நிறைய தண்ணீரை ஊற்றி வேகவிடக் கூடாது. பொரியல் செய்ய சற்று பெரிது பெரிதாக வெட்டி, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சிவந்த மிளகாய் போட்டு பின்னர் வெட்டி வைத்த காயை போட்டு வதக்கி விடவும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடலாம். இல்லாவிட்டால் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து வேகவிடவும். வெந்ததும் அப்படியே சாப்பிட்டாலும் சரி, துருவிய தேங்காயை கலந்தாலும் சரி அட்டகாசம்தான்.
சரி! தோலை என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். தோல் துவையல் செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா?
கடலைப் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய்- 3
பீர்க்கங்காய் தோல்- ஒரு கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
புளி- சுண்டக்காய் சைஸ்
செய்முறை
- சீவிய தோலை நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும், பின்னர் காய்ந்த மிளகாய் போடவும்.
- பூண்டு பற்களை போட்டு வதக்கி, பீர்க்கங்காய் தோலை போடவும். அதன் நிறம் மாறும் வரை வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து கடைசியில் புளி போட்டு ஆறவிடவும்.
- ஆறிய கலவையை மிக்ஸியிலோ அல்லது அம்மியிலோ போட்டு கொரகொரப்பாக அரைத்தால் சூப்பரான துவையல் ரெடி. இதில் கடுகு தாளித்து கொட்டலாம். இல்லாவிட்டால் அப்படியே சாப்பிடலாம்.
- தேவைப்பட்டால் வெங்காயம், தக்காளியை தலா ஒன்று எடுத்து அதையும் வதக்கி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு அதையும் வதக்கி அரைக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த துவையல் அல்டிமேட்டாக இருக்கும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications