Dragon Chicken Recipe: சண்டே உங்க வீட்டுல சிக்கனா..டிராகன் சிக்கன் ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் அள்ளும்
Dragon Chicken Recipe in Tamil: சிக்கனில் பல வெரைட்டிகள் உள்ளன. ஊருக்கு ஊர் ஸ்பெஷலான உணவுகளில் முக்கிய இடம் பிடிப்பது சிக்கன் ரெசிபிக்கள் தான். அந்த வகையில், இந்தோசீன உணவான டிராகன் சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குழந்தைகளுக்குப் பிடித்த நான்வெஜ் உணவுகளில் சிக்கன் எப்போதும் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும். சிக்கன் ஃபிரை, சிக்கன் குழம்பு, சிக்கன் கிரேவி, சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் வறுவல், லெக்பீஸ், லாலிபாப் என பல உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள். சிக்கனில் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி உணவு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா அப்போ இந்த ரெசிபி உங்களுக்குத்தான்.

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், காரமும், இனிப்பும் கலந்த அற்புதமான உணவான டிராகன் சிக்கன் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் எப்படி சமைக்கலாம் என்று பார்க்கலாம்.
டிராகன் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1/4 கால் கப்
சிவப்பு மிளகாய் சாஸ் - 1/4 கப்
வறுத்த எள் - 1/2 ஸ்பூன்
முட்டை - 1
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்குத் தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 4
நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
முந்திரி - 15
டிராகன் சிக்கன் செய்வது எப்படி?
1. எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை நீளவாக்கில் வெட்டி நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. அந்த சிக்கன் துண்டுகளில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், சோளமாவு, மைதா மாவு, மிளகுத்தூள், உப்பு, முட்டை, சோயா சாஸ், வினிகர் சேர்த்து, 30 நிமிடங்கள் நன்றாக ஊறவிடவும்.
3. அடுப்பில் கடாயை வைத்து சிக்கன் பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
4. இன்னொரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டு, வரமிளகாய், முந்திரி சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
5. பின்னர், அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், உப்பு சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். அதிகளவு வதக்க கூடாது.
6. நீளமாக நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். அதில், தக்காளி, சிவப்பு மிளகாய் சாஸ், மிளகுத்தூள், சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்துகொள்ளவும்.
7. அந்தக் கலவையில் சிக்கன் துண்டுகளைப் போட்டு கிளறவும். பின்னர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கலந்துவிடவும்.
8. பின்னர், மல்லித்தழை, எள் தூவிவிட்டால் சூப்பரான டிராகன் சிக்கன் தயார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications