Red Banana Smoothie: காலைல டிஃபன் சாப்பிட நேரமில்லையா? செவ்வாழை ஸ்மூதி இருக்கே! எப்படி செய்யலாம்?
Red Banana Smoothie recipe: சிவப்பு வாழைப்பழம், செவ்வாழையை வைத்து ஒரு சூப்பரான ஸ்மூதியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இது வயிற்றிற்கு நல்ல ஒரு ஃபில்லிங்கை தரும். செவ்வாழையில் ஏராளமான நன்மைகள் இருப்பதால், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். சர்க்கரை நோயுள்ளவர்கள் மருத்துவரை கேட்டு சாப்பிடலாம்.

இன்றைய அவசர உலகில் காலை உணவை உட்கொண்டுவிட்டு செல்லும் நிலை இல்லை. மாநகரங்களில் இருக்கும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக கிளம்பி அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் காலை உணவை ஸ்கிப் செய்யும் நிலை உள்ளது. இது மிகவும் தவறு என்கிறார்கள். எப்போதுமே காலை உணவை ஸ்கிப் செய்யவே கூடாதாம். காலை உணவை சாப்பிட முடியாதவர்கள், ஸ்மூதி என சொல்லப்படும் ஜூஸை போன்றதை சாப்பிடலாம்.
அதிலும் செவ்வாழையில் ஸ்மூதி போட்டால் மதியம் சாப்பிடும் வரை பசிக்காது. அந்த அளவுக்கு வயிறு நிரம்பி இருக்கும் என்கிறார்கள். இந்த ஸ்மூதியை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செவ்வாழை- 1
அத்திப்பழம்- 2
பேரிச்சம் பழம்- 2
பால் 50 மில்லி
முந்திரி, திராட்சை- துண்டு துண்டாக வெட்டியது- சிறிது
அத்திப்பழம், பேரிச்சம் பழத்தில் இருக்கும் இனிப்பே போதும், தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
செய்முறை
அத்திப்பழத்தையும் பேரிச்சம் பழத்தையும் வெந்நீரில் ஊற விடவும்.
பின்னர் வாழைப்பழத்தை உரித்து வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பிளண்டரில் அத்திப்பழம், பேரிச்சம் பழத்தை அந்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். பின்னர் வாழைப்பழம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
இத்துடன் நறுக்கிய முந்திரி, திராட்சை சேர்த்து சற்று ப்ரீசரில் வைத்து குளிர்ந்ததும் குடிக்கலாம். ஒரு வேளை ப்ரீசரில் வைக்கும் அளவுக்கு நேரமில்லை என்றால் மேற்கண்டவைகளை அரைக்கும் போதே 3 ஐஸ் கட்டிகளையும் தூளாக்கி சேர்த்து அரைக்கலாம்.
இந்த ஸ்மூதியை குழந்தைகள், பெரியவர்கள் என குடிக்கலாம். அத்திப்பழம், பேரிச்சம் பழத்தில் அதிக அளவில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை வராது. செவ்வாழையில் ரத்த ஓட்டத்தை உற்பத்தி செய்யும் ஊட்டச்சத்துகள் உள்ளன.












Click it and Unblock the Notifications