உடல் எடையை குறைக்கும் கொள்ளு ரசம்! சளி, இருமலை விரட்டும் கொள்ளு சூப் ரெசிபி!
Horse Gram Rasam Recipe In Tamil: உடல் எடையை குறைக்க கொள்ளு ரசம் செய்து சாப்பிடுங்கள். கிராமத்து கைமணத்தில் தயாராகும் இந்த ரசம், நாவிற்கு இதமான சுவையை தருவதோடு மட்டுமல்லாமல், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகிறது.
குறிப்பாக மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளுக்கு இது ஒரு அருமருந்தாக அமைகிறது. இந்த எளிய மற்றும் சத்தான ரசத்தை உங்கள் வீட்டிலேயே எப்படி சுவையாக செய்வது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கொள்ளு தானியத்தில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது, இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் கிருமிகளுக்கு எதிராக உடலை வலுப்படுத்துகிறது. வெறும் ரசமாக மட்டுமல்லாமல், சூப் போலவும் இதனை பருகலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் பொடிகளை தவிர்த்து, வீட்டிலேயே மசாலா அரைத்து செய்வதால் இதன் மணம் வீடே மணக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த கொள்ளு ரசம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி! இந்த ஆரோக்கியமான கொள்ளு ரசத்தை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கொள்ளு - 1/2 கப்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- தக்காளி - 1 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
- நெய் அல்லது எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
அரைப்பதற்கு...
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பூண்டு - 5 பற்கள்
- வேகவைத்த கொள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்
- முதலில் கொள்ளு தானியத்தை நன்றாகக் கழுவி, குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
- பின் வேகவைத்த கொள்ளு தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும், இதுவே ரசத்தின் சுவையை கூட்டும்.
- அடுத்து அரைக்கக் கொடுத்துள்ள மிளகு, சீரகம், பூண்டு மற்றும் வேகவைத்த கொள்ளு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் புளித் தண்ணீர், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தக்காளியை நன்கு மசித்து விடவும்.
- அடுத்து இந்த புளித் தண்ணீருடன் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கொள்ளு தண்ணீர் மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- இறுதியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, ரசக் கலவையை ஊற்றி மிதமான தீயில் நுரைத்து வரும்போது மல்லித்தழை தூவி இறக்கவும்.


Click it and Unblock the Notifications
