Vendaya Saatham: உடல் சூட்டை தணிக்கும் வெந்தய சாதம்! எப்படி செய்வது? தேவையான பொருட்கள் என்னென்ன?
சென்னை: உடல் உஷ்ணத்தை போக்கும் வெந்தய சாதத்தை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். இதை வெயில் காலங்களில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதை செய்வது மிகவும் எளிது.
வெந்தயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, கொலஸ்ட்ராலை குறைக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த ஒரு சத்தான உணவு இதுவாகும்.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் தசை வலிமையை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும்.
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து அந்த தண்ணீருடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்து சாப்பிடலாம். அதிலும் வெந்தயத்தில் சாதம் செய்தால் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெந்தயம்- 3 ஸ்பூன்
தக்காளி- 2
சின்ன வெங்காயம் - 6
(பெரிய வெங்காயம் இருந்தால் நீளவாக்கில் நறுக்கியது ஒரு கப்)
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
அரிசி - 2 கப்
மிளகாய் பொடி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
கொத்தமல்லி- ஒரு கொத்து
செய்முறை
முதலில் அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய்யுடன் வெந்தயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். தொடர்ந்து தக்காளி, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதிக்கும் நிலையில் ஊற வைத்த அரிசியை வடிகட்டி சேர்க்கவும். தொடர்ந்து கொத்தமல்லி சேர்த்து கிளறி ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பின்னர் குக்கரை மூடி 2 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து அணைத்துவிடவும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications