இந்த கஞ்சியை காலையில 1 கப் குடிச்சா.. 1 மாசத்துல 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்! ட்ரை பண்ணுங்க!
Kuthiraivali Pachaipayaru Kanji Recipe In Tamil: உங்களுக்கு உடல் எடை அதிகமா இருக்கா? எடையைக் குறைக்க பல வழிகளைப் பார்த்துட்டு தோல்வியடைஞ்சீங்களா? அப்போ முதல்ல உங்க உணவுப் பழக்கத்தை மாத்துங்க. ஏன்னா, உணவுதான் உடல் எடையை கூட்டுறதுக்கு முக்கிய காரணம். சரியான உணவு தேர்ந்தெடுத்தா, விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

உடல் எடையை வேகமா குறைக்கணும்னா, சிறுதானிய கஞ்சி காலை உணவுக்கு சூப்பர் சாய்ஸ். குறிப்பா குதிரைவாலி அரிசியோட பச்சை பயறு கஞ்சி சாப்பிடும்போது, உடல் எடையில் பெரிய மாற்றம் தெரியும். இதுல கலோரி ரொம்பக் குறைவு. ஒரு கப் கஞ்சி குடிச்சா, வயிறு நீண்ட நேரம் சாப்பிட்ட நிலையில இருக்கும்.
இந்த சூப்பர் குதிரைவாலி பச்சை பயறு கஞ்சியை எப்படி செய்வது? கீழே எளிய செய்முறையோட பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கு. இதை ட்ரை பண்ணி, உங்க அனுபவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
தேவையான பொருட்கள்
* குதிரைவாலி அரிசி - 3/4 கப்
* பச்சை பயறு - 1 கப்
* பூண்டு - 5 பல்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப் + தேவையான அளவு
* துருவிய தேங்காய் - 1 கையளவு
செய்முறை
* பச்சை பயறை முன்கூட்டியே இரவு ஊற வைங்க.
* காலையில குதிரைவாலி அரிசியை 4 முறை கழுவி குக்கர்ல போடுங்க.
* ஊறவைத்த பயறு, பூண்டு, வெந்தயம் சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றுங்க.
* உப்பு போட்டு கலந்து, குக்கரை மூடி 7 விசில் வரை வேக விடுங்க.
* விசில் போனா திறந்து கலந்து, கெட்டியா இருந்தா தண்ணீர் சேர்க்கவும்.
* மேல துருவிய தேங்காய் தூவி கிளறினா, சுவையான கஞ்சி ரெடி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications