Mutton kola urundai: ருசியான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை.. இப்படி செய்து பாருங்க
Mutton kola urundai: குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணும் செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
அசைவம் என்றாலே மட்டன் தான், பிரியாணி என்றாலே மட்டன் பிரியாணி தான் என்று பல அசைவப் பிரியர்கள் கூறுவதைக் கேட்டிருப்போம். அந்த அளவுக்கு ஆட்டுக் கறியின் சுவை அருமையாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகள் சிக்கனைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குழம்பு போன்றவற்றையே சாப்பிடுவார்கள். ஆனால், மட்டனே பிடிக்காத குழந்தைகளும் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டையை செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டுகள் குவியும்.

தேவையான பொருட்கள்
கொத்துக்கறி - 750 கிராம்
பெரிய வெங்காயம் - 4
பொட்டுக் கடலை - 7 ஸ்பூன்
கசகசா - 2 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்
முட்டை - ஒன்று
பச்சை மிளகாய் - 7
பட்டை - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 10 பல்
மஞ்சள்தூள் - தேவையான அளவு
செய்முறை
1. முதலில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. குக்கரில் தேவையான அளவு சமையல் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
4. பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
5. பின்னர், சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றி வதங்கியதும் அரைத்துக் கொள்ளவும்.
6. மிக்ஸியில் மட்டன் கறியை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், கறியுடன் முட்டையை உடைத்து ஊற்றி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
7. பின்னர், சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
8. அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறி உருண்டைகளைப் போட்டு சிவக்க பொறித்து எடுத்தால், சூடான சுவையான செட்டிநாடு ஸ்பெஷல் கோலா உருண்டை ரெடி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications