Mutton kothu kari: எல்லா உணவுக்கும் பொருந்தும் மட்டன் கொத்துக்கறி.. இப்படி சமைச்சு பாருங்க
Mutton kothu kari: ஆட்டுக்கறி வறுவல், குழம்பு, ஈரல் ஃபிரை, குடல் குழம்பு, மட்டன் கிரேவி, ரத்தப் பொறியல், நல்லி சாப்ஸ், மூளை ஃபிரை, தலைக்கறி, சுவரொட்டி என ஆட்டின் வாலைத் தவிர ஏகப்பட்ட வெரைட்டிகளை பார்ட்ஸ் பார்ட்ஸ் ஆக பிரித்து பிரித்து செய்யலாம் என்றால் அது மட்டனில் மட்டும் தான் முடியும். அதிலும் மட்டனில் கொத்துக்கறி தான் மிகவும் ஸ்பெஷல். சாப்பாடு, சப்பாத்தி, தோசை, பரோட்டா என என்ன சமைத்தாலும் அதற்குப் பொருந்தும்.. சூடான, சுவையான மட்டன் கொத்துக்கறி எப்படி சமைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்
கொத்துக்கறி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
பட்டை - 1
லவங்கம் - 2
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மட்டன் மசாலா 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 3/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மட்டன் கொத்துக்கறி செய்யும் முறை:
1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம் சேர்க்கவும்.
2. நன்றாகப் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
3. பின்னர், அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மசிக்கவும். கழுவி வைத்துள்ள கொத்துக்கறியை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்.
4. நன்கு வதங்கிய பின்னர் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மட்டன் மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.
5. பின்னர், ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்
6. கொத்துக்கறி நன்றாக வெந்ததும் கடைசியாக பெப்பர் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
7. சூடான, சுவையான மட்டன் கொத்துக்கறி ரெடி. இந்த கொத்துக்கறியை சூடான சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்து வகைக்கும் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும். அப்புறம் என்ன இதை ட்ரை செய்து அசத்துங்க.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications