Nattu kozhi Soup: ஆரோக்கியம் நிறைந்த நாட்டுக்கோழி சூப்.. இப்படி சமைச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

Nattu kozhi soup in Tamil: மழைக்காலம் தொடங்கியாச்சு. சளி, இருமல், காய்ச்சல் என்று குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது இருந்து கொண்டே இருக்கும். எது வந்தாலும் சரி அதிலிருந்து தப்பிக்க இந்த கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி சூப் ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுல பாராட்டு மழை பொழியும். வாங்க நாட்டுக்கோழி சூப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

நாட்டுக்கோழி மிகவும் ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதில், கால்சியம், பொட்டாசியம் நிறைந்து காணப்படுவதால் தசை வளர்ச்சி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும். சளியைத் தணிக்கும் அருமருந்தாகவும் உள்ளது. சுவையான நாட்டுக்கோழி சூப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

chicken food soup health

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி கறி - 1\4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - தேவையான அளவு

பூண்டு - 8 பல்

இஞ்சி சிறிய துண்டு - 1

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை, ஸ்டார் பூ - 1

மிளகாய் தூள் - 1\4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1\4 டேபிள் ஸ்பூன்

சீரகத் தூள் - - 1\4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

நாட்டுக்கோழி சூப் செய்வது எப்படி?

1.முதலில் சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஸ்டார் பூ, கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

5. அதில், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

6. சிக்கன் துண்டுகளை அதில் போட்டு நன்கு வதக்கவும். பின்னர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் 3 கப் சேர்த்து நன்கு கிளறி குக்கர் மூடிப் போட்டு 3 விசில் விடவும்.

7. விசில் அடங்கிய பின்னர் சூப்பை பரிமாறவும். சூடான, சுவையான நாட்டுக்கோழி சூப் ரெடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+