Palak Paneer Recipe: சப்பாத்திக்கு அட்டகாசமான காம்பினேஷன்.. பாலக் பன்னீர் ட்ரை பண்ணி பாருங்க
Palak Paneer Recipe: உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவு சப்பாத்தி. பெரும்பாலும் சப்பாத்திக்கு வெஜ்குருமா, சிக்கன் குருமா, மட்டன் கிரேவி என்று தான் சமைத்து சாப்பிடிருப்பீர்கள். ஆனால், இந்த உணவுக்கெல்லாம் டப்பு கொடுக்கும் ஒரு சூப்பர் காம்பினேஷன் என்றால் அது பாலக் பன்னீர் தான். வாங்க இந்த ஆரோக்கியம் நிறைந்த பாலக் பன்னீர் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

பாலக் பன்னீர் செய்யும் முறை
பன்னீர் - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
பாலக்கீரை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கசகசா - 1 ஸ்பூன்
முந்திரி - 8
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பாலக் பன்னீர் செய்யும் முறை
1. முதலில் பாலக்கீரையை ஆய்ந்து, தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
2. அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். வெண்ணெய் உருகி லேசாக சூடானதும் அதில் பாலக்கீரை போட்டு நன்கு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு சிறிய பாத்திரத்தில் கசகசா மற்றும் முந்திரியை சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.
4. வதக்கி வைத்துள்ள பாலக்கீரையை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதேபோல, கசகசா, முந்திரியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
5. மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் வெண்ணை சேர்க்கவும். அதில், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள பாலக்கீரை சேர்த்து, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
7. பின்னர், அரைத்து வைத்துள்ள முந்திரி மற்றும் கசகசா கலவையை சேர்த்து, பன்னீர் துண்டுகளை போடவும்.
8. நன்றாக கொதி வந்ததும் இறக்கினால் சுவையான பாலக் பன்னீர் தயார். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். அப்புறம் என்ன நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications