Pazhampori Recipe: தித்திக்கும் கேரளா ஸ்டைல் பழம்பொறி.. உங்க மாலை நேரத்தை கூடுதல் இனிமையாக்குங்க
Pazhampori recipe in tamil: உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஈவ்னிங் ஸ்நாக் செய்து கொடுக்க வேண்டும் என்று யோசிச்சிட்டு இருக்கீங்களா. சிம்பிளாகவும், குறைந்த நேரத்திலும் செய்யக்கூடிய இந்த கேரளா ஸ்டைல் பழம்பொறி ட்ரை பண்ணி பாருங்க..
தமிழகத்தில் வாழைக்காய் பஜ்ஜி எப்படி ஃபேமஸோ, கேரளத்தில் பழம்பொறி ரொம்ப ஃபேமஸ். கேரள மக்களின் சிற்றுண்டியாகவும், தின்பண்டமாகவும் உள்ள பழம்பொறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் ஒரு உணவு வகையாகும். கேரளா ஸ்டைல் பழம்பொறியை வீட்டிலேயே மாலை நேர ஸ்நாக்காக ஈஸியாக செய்யலாம். நேந்திரம் பழத்தில் பொதுவாக பழம்பொறியை செய்வார்கள். ஆனால், இந்த ரெசிபியை எந்த பழம் கொண்டு செய்தாலுமே அட்டகாசமாக இருக்கும். வாங்க கேரளா ஸ்டைல் பழம்பொறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
சீரகத்தூள் சிறிதளவு
பழம்பொறி செய்யும் முறை
1. முதலில் மைதா மாவை தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.
2. பின்னர், அதில் மேலே கூறிய அனைத்துப் பொருள்களையும் சேர்ந்து கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
3. அதில், நேந்திரம் பழத்தை தோல் சீவி, நுனியை நீக்கிக் கொள்ளவும். பின்னர், நீளமாக வாழைக்காய் பஜ்ஜிக்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் வாழைப்பழ துண்டுகளை மாவில் நன்றாகப் போட்டு எடுத்து பொறிக்கவும். சூடான சுவையான கேரளா ஸ்டைல் பழம்பொறி ரெடி. மாலை மங்கும் நேரத்தில் சுடச்சுட ஒரு கப் தேநீருடன் பழம்பொறியை பரிமாறுங்க.. அசந்து போயிருவீங்க..
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications