Peanut Laddu Recipe: புரோட்டீன் சத்து நிறைந்த நிலக்கடலை லட்டு.. குட்டீஸ்க்கு சூப்பர் ஸ்நாக்ஸ்

Subscribe to Oneindia Tamil

Peanut Laddu Recipe In Tamil: பிஸ்தா, பாதம், வால்நட்டை விட ஏராளமான சத்துக்கள் நிறைந்தது நம் பாரம்பரியமான நிலக்கடலை. சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை விரும்பி உண்ணக்கூடிய வகையில் நிலக்கடலையில் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, போன்ற பருப்புகளில் தான் புரோட்டின் சத்து நிரம்பியுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், விலை கம்மியாகவும், அதே நேரத்தில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடிய நிலக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

food health peanut

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் நல்ல கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஏராளமான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் உள்ளது. உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் வைட்டமின் பி சத்து நிலக்கடலையில் உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். நிலக்கடலையில் நன்மை தரும் கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தைத் தரும், ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த நிலக்கடலையில் லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

நிலக்கடலை லட்டு செய்யத் தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 1 கப்

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 3/4 கப்

ஏலக்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்


நிலக்கடலை லட்டு செய்யும் முறை

1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்கவும்.

2. பின்னர், நிலக்கடலையின் சூடு ஆறியதும் அதன் மேல் உள்ள தோலை நீக்கவும்.

3. நிலக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் அரைக்கக் கூடாது. அப்படி அரைத்தால் எண்ணெய் வந்துவிடும் என்பதால் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

4. பின்னர், அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றவும்.

5. அந்தக் கலவையை ஒரு தட்டில் சேர்த்து, ஏலக்காய்த் தூளை தூவி விடவும்.

6. பின்னர், உங்களுக்குத் தேவையான அளவில் உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான சத்து நிறைந்த நிலக்கடலை லட்டு ரெடி

இந்த நிலக்கடலை லட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியதாகும். குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு ஸ்நாக்காகவும் கொடுத்து அனுப்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+