Pirandi Thuvaiyal: ஆரோக்கியம் நிறைந்த பிரண்டை துவையல்.. இப்படி சமைத்து பாருங்க.. டேஸ்ட் அள்ளும்
Pirandai Thuvaiyal: கொடி வகையைச் சேர்ந்த பிரண்டை மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் வகையில் சுவையான பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பிரண்டை கொடி வகையைச் சார்ந்ததாகும். ஆரோக்கியம் நிறைந்த இந்த பிரண்டை மூலிகைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டதாகும். உடலில் சுறுசுறுப்பை அதிகப்படுத்துவதுடன், ஞாபகசக்தியையும் மேம்படுத்தும். சுழுக்கு, பிடிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவற்றுக்கு பிரண்டை அருமருந்தாகும்.

பிரண்டையை உணவாக சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். எலும்புகளுக்கு சக்தியைத் தரும். இது மூளை நரம்புகளையும் பலப்படுத்தும் தன்மை கொண்டதாகும். பிரண்டையில் சுவையான துவையல் செய்யும் முறை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பிரண்டை துவையல் செய்ய தேவையான பொருட்கள்
பிரண்டை - 1 கட்டு
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய் - 1 துண்டு
புளி - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
பிரண்டை துவையல் செய்யும் முறை:
1. காடுகள் மற்றும் வேலியில் கிடைக்கும் இந்தப் பிரண்டையை பறித்து அதன் மேல் உள்ள தோலை நீக்கிக் கொள்ளவும்.
2. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு, 6 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. அதில், பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், நறுக்கிய தேங்காயைப் போட்டு நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
4. நன்கு வதக்கிய பின்னர், சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள பிரண்டையை அதில் சேர்த்து வதக்கவும்.
5. பின்னர், பிரண்டையில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
6. வதக்கிய கலவைகள் சூடு ஆறிய பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
7. ஆரோக்கியம் நிறைந்த சுவையான பிரண்டை துவையல் ரெடி. இந்தப் பிரண்டைத் துவையலை சூடான சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, அடை என எந்த உணவுகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications