Ragi Thattu Vadai Recipe: உடலுக்கு வலிமை தரும்.. சுவை மிகுந்த ராகி தட்டு வடை.. சூப்பரான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்
How to make ragi thattu vadai: மாலை நேரம் ஆனாலே பள்ளி முடித்து வரும் குழந்தைகளும் சரி, அலுவலகம் முடித்து வரும் கணவன், மனைவியும் சரி வீட்டிற்கு வந்ததும் ஏதாவது ஸ்நாக்ஸ் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். அந்த வகையில் உங்கள் மாலை நேரத்தை நிச்சயமாக இனிமையாக்கும் இந்த ராகி தட்டு வடை ரெசிப்பி. ஒரு வாரம் என்ன, ஒரு மாதத்துக்கு கூட வைத்து சாப்பிடும் அளவுக்கு ஆரோக்கியம் நிறைந்த ராகி தட்டுவடை செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராகி தட்டுவடை செய்யத் தேவையான பொருட்கள்
ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - சிறிதளவு
தண்ணீர் - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
வேர்க்கடலை - 1/4 கப்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை
கடலை எண்ணெய் - 1/2 லிட்டர்
ராகி தட்டுவடை செய்யும் முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா சேர்க்கவும்.
2. பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும்.
3. அதில், வறுத்த வேர்க்கடலையை சேர்த்து, ஒரு ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.
4. அந்தக் கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை தட்டும் அளவுக்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
5. பின்னர், சிறிது சிறிதாக மாவை எடுத்து எண்ணெய் தடவி தட்டு வடைகளை தட்டி எடுத்துக் கொள்ளவும்.
6. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தட்டு வடையை போட்டு பெரித்தெடுத்தால் ராகி தட்டை வடை தயார்.
7. வெங்காயம் சேர்த்துள்ளதால் இந்த வடையை ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். வெங்காயம் சேர்க்காவிட்டால் ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம். அப்புறம் என்ன உங்க மாலை நேரத்தை ராகி தட்டு வடையும் இனிமையாக்குங்க..
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications