Black Bugs in Rice: அரிசியில் வண்டு வைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
How to prevent rice from black bugs: என்னதான் அரிசி வைக்கும் பாத்திரத்தை நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து அதில் நியூஸ் பேப்பரை வைத்து அரிசியை கொட்டினாலும் கருப்பு நிற வண்டுகள் வரத்தான் செய்கிறது. இதற்கு தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
தென்னிந்தியர்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என எங்கு சென்றாலும் அரிசி பிரதானம். இதில் அரிசியின் ரகம் மாறுபடும். கேரளாவில் சிகப்பு அரிசி அல்லது குண்டு அரிசியை பயன்படுத்துவார்கள்.

சிலருக்கு சாதம் சாப்பிடாவிட்டால் அன்றைய பொழுதே என்னமோ போல் இருக்கும். இதனால் இரவு நேரத்தில் ஒரு பிடி சாதமாவது சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். இந்த அரிசியை குறுணையாக்கி சிறு குழந்தைகளுக்கு கஞ்சி கொடுப்போம். அது போல் பல் இல்லாதவர்களுக்கும் இந்த சாதமே சவுகரியமான உணவாகும்.
அப்படிப்பட்ட அரிசியை பெரிய பெரிய டிரம்களில் வாங்கி சேமித்து வைப்போம். ஆனால் என்னதான் சேமித்தாலும் எப்படியாவது வண்டு வைத்துவிடும். இதனால் இந்த அரிசியை ஒவ்வொரு முறையும் புடைத்து புடைத்து பயன்படுத்த வேண்டும்.
அரிசியை வெயிலில் எடுத்து காய வைத்து வைத்து எடுப்பார்கள். சல்லடை வைத்து சலிப்பார்கள். ஆனாலும் மீண்டும் வண்டு வைத்துவிடும். இதை தடுக்க வேப்ப இலைகளை எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி அந்த அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்துவிடவும்.
இல்லாவிட்டால் கிராம்புகளை சிறிதளவு எடுத்து அவற்றையும் அரிசி பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். உரித்த பூண்டை போட்டு வைத்தாலும் வண்டு வராது. ஆனால் பூண்டில் இருக்கும் ஈரத்தன்மை அரிசியை கெடுத்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications