Hotel Style Coconut Chutney: தேங்காய் சட்னி எப்படி அரைச்சாலும் ஹோட்டல் டேஸ்ட் இல்லையா? இதோ ரெசிபி!
Hotel Style Coconut Chutney recipe in Tamil: ஹோட்டலில் அரைக்கும் சட்னி, சுவையாகவும் மணமாகவும் இருக்கிறது. நாம் என்னதான் தேங்காயை கூட்டி, குறைத்து போட்டாலும் அந்த டேஸ்டில் வரவில்லை என பலர் கவலைக் கொள்வர்.
அப்படியே அரைத்தாலும் ஒரு நாள் நன்றாக வரும், பிறகு நமக்கே பிடிக்காது. அதற்காக தினமும் ஹோட்டலில் போய் சாப்பிட முடியாது. ஆனால் அந்த ஸ்டைல் சட்னியை வீட்டிலேயே அரைக்கலாமே! ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி எப்படி அரைப்பது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய்- அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4
தேங்காய் - அரை கப்
வறுகடலை- 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு உரித்தது - 1
உப்பு- அரை ஸ்பூன்
தண்ணீர்- 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
செய்முறை
எண்ணெய் ஊற்றி அதில் 4 பச்சை மிளகாயை உடைத்து போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி, அத்துடன் தேங்காய், வறுகடலை, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான ஹோட்டல் ஸ்டைல் சட்னி ரெடி! இட்லி, தோசைக்கு ஏற்ற சைடு டிஷ்!












Click it and Unblock the Notifications