சந்தோஷத் திருவிழா
டாக்டர். ஜெரோம் சேவியர்
கிருஸ்தவர்களின் சந்தோஷத் திருவிழா, இயேசு பிரானின் பிறப்புத் திருநாள் கிருஸ்துமஸ்.
ஒவவொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் திருநாளின் வரலாறு குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
கிருஸ்துமஸ் முன்பு இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படவில்லை. கி.பி. 300ம் ஆண்டு வரை அது ஒரு ரோம் நகர திருவிழாவாகமட்டுமே இருந்து வந்தது.
போப்பாண்டவராக ஜூலியஸ் என்பவர் பதவி ஏற்ற பின்னர் தான் இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டமாக மாறியது.
இயேசுபிரான் அவதரித்த நாள் எது என்பதில் துவக்கத்தில் குழப்பம் இருந்தது. வெவ்வேறு தேதிகளில் இது கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் டிசம்பர்25ம் தேதிதான் இயேசு அவதரித்தார் என்று கி.பி.336ல் வெளியிடப்பட்ட ரோமன் காலண்டரில் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது.
டிசம்பர் 25 தான் இயேசுவின் பிறந்த தினம் என்பதை ரோமன் கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டன்ட் பிரிவினரில் பெரும்பான்மையானவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் கிழக்கத்திய ஆர்த்தோடக்ஸ் (ரஷியர்கள்) பிரிவினர் அதை ஏற்க மறுத்து ஜனவரி 6ம் தேதிதான் இயேசு அவதரித்தார் என்று கூறினர். ஜனவரி6ம் தேதி தான் அவர்கள் கிருஸ்துமஸை இன்று வரை கொண்டாடி வருகிறார்கள்.
இதேபோல ஆர்மீனிய சர்ச் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 19ம் தேதியை கிருஸ்துமஸாக கொண்டாடுகிறார்கள்.
ஐரோப்பாவில் கி.பி.1100ல்தான் கிருஸ்துவமஸ் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஐரோப்பியக் கண்டத்தின் முக்கியத் திருவிழாவாக கிருஸ்துமஸ்மாறியது.
கிருஸ்துவர்களிடையே கருத்துப் பிளவு ஏற்பட்டது. புரோட்டஸ்டன்ட் என்ற பிரிவினர் உருவாகினர். இதனால் இங்கிலாந்தில் 1600ல் கிருஸ்துமஸ்கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இதுதான் ஆரம்ப கால கிருஸ்துமஸின் சுருக்கமான வரலாறு.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications