தீபாவளி-எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம் எது?

தீபாவளிப் பண்டிகை வருகிற திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அம்சமே கங்கா ஸ்நானம் எனப்படும் எண்ணெய்க் குளியல்தான். இதை நல்ல நேரத்தில்தான் செய்ய வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக்குளித்த பின்னர் புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு, இனிப்புகளை சாப்பிட்டு விட்டு பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
இதில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க அதிகாலை 3.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி அஸ்தம் நட்சத்திரத்தில் வருகிறது. அஸ்தம் சூரியனின் நட்சத்திரம் ஆகும். இது கூடுதல் சிறப்பாகும்.
தீபாவளிக்கு முன்தினம் இரவிலேயே வெந்நீர் வைக்கும் பாத்திரத்தில் சுண்ணாம்பு அல்லது மஞ்சளில் சூரியன், சந்திரன் படத்தை வரைந்து, தண்ணீர் நிரப்பி, ஆல், அரசு, அத்தி, புசு மற்றும் மாவிலங்க பட்டை போட்டு வைக்க வேண்டும். அதிகாலையில் அந்த தண்ணீரை சூடுபடுத்தி குளிக்க வேண்டும்.
அன்றைய தினம் வெள்ளை, ரோஸ், சிவப்பு, பொன் நிற ஆடைகள் அணிவது சிறப்பாகும்.
தீபாவளிக்கு முன் இரவும், தீபாவளி அன்றும், மறுநாளும் இரவில் பட்டாசு கொளுத்தி, வெடி வெடித்து கொண்டாடலாம்.
பொதுவாக அமாவாசை தினத்தில் தீபாவளி வரும். இந்த ஆண்டு மறுநாள் தான் அமாவாசை வருகிறது. தலை தீபாவளி தம்பதியருக்கு இந்த ஆண்டு தீபாவளி தினம் அனைத்து வகையிலும் குதூகலம் அளிக்கும் நாளாக அமைந்துள்ளது.
தீபாவளியையொட்டி கேதார கவுரி விரதம் வருகிறது. தாலி பாக்கியம் வேண்டி பெண்கள் இந்த விரதம் மேற்கொள்கிறார்கள். வீடுகளில் இனிப்பு பட்சணங்கள் தயாரித்து அவற்றை கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்து அனைவருக்கும் கொடுத்து சாப்பிடுவது மகிழ்ச்சியைத் தரும்.
வட இந்தியாவில் தீபாவளியையொட்டி அமாவாசை முடிவில், பிரதமை ஆரம்பத்தில் லட்சுமி குபேர பூஜை நடத்தி தொழில், வர்த்தக நிறுவனங்களில் புதுக்கணக்கு போடுகிறார்கள். இந்த ஆண்டு 28-ந் தேதி குபேர பூஜைக்கு உகந்த நாள் ஆகும். தீபாவளியும், குபேர பூஜையும் அடுத்து அடுத்து வருவதால், இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications