அசத்தல் அசோக்ஜி
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க தவம் செய்தேன். இப்போது நீலகிரிதேயிலைக்கு விலை கிடைக்க பெரிய அளவில் யாகம் செய்யப் போகிறேன். அடுத்து,தமிழகத்தில் ஆட்சிக்கு யார் வருவாங்க என்று கூட என்னால் சொல்ல முடியும் எனபெருமை பொங்கச் சொல்கிறார் அசோக்ஜி.
பழனி அருகே குடியிருந்து வரும் அசோக்ஜி, ஒரு சராசரி மனிதராக வாழ்ந்தாலும்,ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து, அந்தக் கால "சித்து விளையாட்டுமுறைகளைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு புட்டபர்த்தி சாய்பாபா போலவே, கையைநீட்டி மடக்கினால் குங்குமம், சிலை என விளையாட்டுக் காண்பிக்கிறார்.
ஒரு பொருளை இருந்த இடத்திலேயே வரவழைக்க முடியும் எனக் கூறும் இவர், அந்தப்பொருளை நாம் உருவாக்க முடியாது. எங்காவது ஒரு இடத்திலிருந்து எடுத்துத் தான்தர முடியும் என்கிறார் இவர். அந்தப் பொருளை இருந்த இடத்திலேயே வரவழைப்பதுகூட ஒரு திருட்டுத் தான் என்பது இவரது வேதாந்தம்.
"செய்வினை என இப்போதும் தமிழக கிராமப் புறங்களில் ஒரு பழக்கம் உண்டு.செய்வினை வைத்து விட்டால், கை கால்கள் விளங்காமல் போய் விடும் என்றநம்பிக்கை உள்ளது. செய்வினை மூலம் பிறரைக் கெடுக்க முடியும் என்கிறார் அசோக்ஜி. ஆனால் இதையே எதிர்மறையாக, நன்மை செய்யவும் பயன்படுத்த முடியும்என்கிறார் இவர்.
ஒருவரது நோயை குணப்படுத்தவும் செய்வினை மூலம் முடியுமாம். மனஒருமைப்பாட்டால் இது சாத்தியம் என்கிறார் அசோக்ஜி. இது வரை பலருக்கு இந்தவிதத்தில் நோயைக் குணப்படுத்தியதாகக் கூறும் இவர், புதுமையான பலபொருட்களைக் கண்டுபிடித்துள்ளார். இதனை மார்க்கெட்டிங் செய்யும் முயற்சியில்விரைவில் ஈடுபடப் போவதாகவும் கூறியுள்ளார்.
எடையே இல்லாத மரப் பலகையைத் தயாரித்துள்ளார். எளிதில் இது தீப்பற்றாது.உறுதியுடன் இருக்கும். சதுர அடி நான்கே ரூபாய் என்ற அதிரடி விலையும் இதற்குஉண்டு என்கிறார் இந்த பழனி "சாமி.
இரும்பிற்கு அடிக்கப்படும் புது வகை பெயிண்ட் ஒன்றையும் அவர்உருவாக்கியுள்ளார். இந்தப் பெயிண்ட்டை அடித்து விட்டால், துரு கொஞ்சம் கூடபிடிக்க வாய்ப்பே இல்லை. இந்தப் பெயிண்டை மும்பையில் உள்ள ஒரு கம்பெனியின்உதவியுடன் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்(இன்னொரு ராமர் பிள்ளை நமக்குக் கிடைப்பாரோ?).
சாமியர்களுக்கு இருப்பிடமாக இருப்பது ஆஸ்ரமம் தானே? இந்த அசோக் ஜி, சாமிக்குமட்டும் விதிவிலக்கு. சிரமம் இல்லாத இடம் தானே ஆஸ்ரமம் என்கிறார். ஆஸ்ரமம்என்றால் எந்த சிக்கலும் துன்பம் இல்லாத சிரமம் இல்லாத இடம் என்கிறார். இவர்தங்கியிருந்தது என்னவோ கோவையிலேயே பெரும் புகழ்மிக்க ஓட்டல் தான். இந்தஓட்டலில் மாதக் கணக்கில் தங்கியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் (கொஞ்சம்காஸ்ட்லி சாமி!).
முன்பெல்லாம் சித்தில் புகுந்து விளையாடிய இவருக்கு, இப்போது அதில் ஈடுபாடுஇல்லை. ஒரு முறை, சமாதியோகத்திற்குச் சென்றதாக இவர் கூறுகிறார்.சமாதியோகத்தில் இருந்தபோது, நான் இறந்து விட்டதாகக் கருதி கோவை கே.ஜிமருத்துவமனையில் சேர்த்து விட்டனர்.
அங்கு என்னைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், 9 பேர் நான் இறந்து விட்டதாகசர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதாவது எனது உடல் உறுப்புகள் அனைத்தும்இயக்கங்களை நிறுத்தி விட்டது. ஆனால் மூளை மட்டும் 5 சதவீதம் இயங்கியுள்ளதுஎன அவர்கள் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து நான் தப்பியது பெரும் சாதனை தான்என்கிறார் அசோக்ஜி.
ராஜ்குமார் நல்லபடியாக விடுதலையாக வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகக்கூறும் அசேக்ஜி, தவ வலிமையால் எதையும் சாதிக்கலாம் என்கிறார். நீலகிரி தேயிலைபிரச்னை தீர கடந்த பல மாதங்களாக தியானம், பிரார்த்தனை மேற்கொண்டார்.இதனால், பச்சைத் தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 5 லிருந்து ரூ. 7 வரைஉயர்ந்துள்ளது எனக் கூறுகிறார்.
இப்போது தேயிலை பிரச்னைக்காக இம்மாதம் ஒரு யாகம் நடத்துகிறேன். இந்த யாகம்முடிந்ததும், பச்சைத் தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 10 கிடைக்கும்.பொருத்திருந்து பாருங்கள் என சவால் விடுகிறார் இவர். இன்னும் 15 நாட்களில் இந்தவிலை உயர்வு கிடைக்கும் என்கிறார்.
இதோடு விட்டாரா? பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னதாகத் தேர்தல் நடந்தால், தி.மு.ககூட்டணி வெல்லும். பிப்ரவரிக்கு பிறகு அ.தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புஅதிகமாக இருக்கிறது என்கிறார்.
மத்தியில் 2002 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆட்சி கவிழ்ந்து விடும். 2002ம் ஆண்டுஅக்டோபர் மாதம், இந்தியா வல்லரசு நாடாக அறிவிக்கப்படும் என்கிறார் அசோக்ஜி.
எல்லாம் உண்மை தானா? நம்புவதும், நம்பாததும் நம் மனதைப் பொறுத்தது. அசோக்ஜியின் அனுமானங்கள் உண்மையா என்பதை வரப் போகும் நாட்கள்தான் நிரூபிக்கவேண்டும்.












Click it and Unblock the Notifications