சர்க்கரை போட்டா கேசரி, உப்பு போட்டா உப்புமா!
ரவை மட்டும் இருந்தால் போதும். இனிப்பு- கார வகைகளில் பல ரகமாய் சமைத்துவிடமுடியும்.
இதோ. சாம்பிலுக்கு சில,
ரவா கேசரி:
தேயாைன பொருட்கள்:
- ரவா : கால் கிலோ
- சர்க்கரை: : தேவையான அளவு
- (சர்க்கரையை அவரவர் இனிப்புத் தேவைக்கு ஏற்றாற் போல் சேர்த்துக் கொள்ளலாம்என்பதற்காகத்தான் சர்க்கரை தேவையான அளவு என கொடுக்கப்பட்டிருக்கிறது)
- முந்திரிப்பருப்பு : தேவையான அளவு
- உலர்ந்த திராட்சை : தேவையான அளவு
- நெய் : 100 கிராம்
- ஏலக்காய் : சிறிதளவு
செய்முறை:
முதலில் ரவாவை கடாயில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் முந்திரிப்பருப்பை நெய்யில் பொன் நிறமாக வறுத்துவைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு நன்றாக கரையும் வரை கிளறிவரவேண்டும். பின் அதில் ரவாவை போட்டு ரவை கரைந்தது ரவாவும், சர்க்கரையும்ஒன்றொடுன்று கலக்கும் விதமாக கிளற வேண்டும்.
இதில் நெய்யில் வறுத்து வைக்கப்பட்டிருக்கும் முந்திரிப் பருப்பையும், பொடி செய்துவைக்கப்பட்டுள்ள ஏலக்காயையும், உலர்ந்த திராட்சையும் போட்டு தொடர்ந்து கிளறிவர வேண்டும்.
இந்தக் கலவை கெட்டியானவுடன் ( கல் போல் கெட்டியாகக் கூடாது மிதமான அளவுவெண்ணெய் போல் கெட்டியாக இருக்க வேண்டும்) அதை இறக்கி வைத்து அதன்மேல் சிறிதளவு நெய் ஊற்றி சுடச் சுட பரிமாறி சுவையுங்கள்.
******************************
ரவா பாயசம்: - ரவா கேசரி செய்ய தேவைப்படும் பொருட்கள் தான் இதற்கும் தேவைப்படும்.
- நெய் தேவையில்லை.ஏலக்காய் பொடி செய்யப்பட வேண்டியதில்லை.
செய்முறை:
பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு கரையும் வரை கிளறி,வறுத்துவைக்கப்பட்டிருக்கும் ரவாவையும், முந்திரி,
ஏலக்காய், திராட்சையைப் போட்டு நன்றாக கிளறி வர வேண்டும். ரவை பசைபோல்கரைந்திருந்தால் போதுமானது முழுவதும் கரைய வேண்டும் என்ற அவசியமில்லை.
பாயசம் குடிப்பதற்கு ஏற்ற வண்ணம் திரவாக இருக்கவேண்டும். நன்றாககொதித்தவுடன் இறக்கி டம்ளில் ஊற்றி சுவைக்கக் கொடுங்கள்.
இனிப்பு சரி.
******************************
காரம்...
ரவா உப்புமா:தேவையான பொருட்கள்:
- ரவா : கால் கிலோ
- பச்சை மிளகாய் : இரண்டு அல்லது மூன்று
- கடுகு : சிறிதளவு
- எண்ணெய் : 50 கிராம்
- உப்பு : தேவையான அளவு
செய்முறை:
கடாயில் ரவாவை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிதளவுஎண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை(ஒரு பச்சை மிளாகாயை நான்காகவோ அல்லது ஐந்தாகவோ வெட்டிக் கொண்டால்போதுமானது) வெட்டி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் வறுத்து வைத்த ரவா மூழ்கும் வண்ணம் நீர் ஊற்றி ரவா கரையும் வரை கிளறிவரவும். நடுவே மிளகாயை போட்டு கிளறவும், ரவா சற்றே கெட்டியானவுடன் மிகச்சிறிய அளவு எண்ணெய் ஊற்றி கிளறி வரவும்,
கிளறப்பட்ட ரவா மிதமான அளவு கெட்டியான உடன் எடுத்து சாப்பிடலாம்.
******************************
ரவா கிச்சடி:தேவையான பொருட்கள்:
- ரவா உப்புமாவிற்கு தேவைப்படும் அதே பொருட்கள்தான். அத்துடன் கேரட்,உருளைக்கிழங்கு, காலி பிளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள்ஒவ்வொன்றும் 50 கிராம் அளவு வாங்கிக் கொண்டால் போதுமானது
செய்முறை:
காய்கறிகளை மிக சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.இதை குக்கரிலோதுஅல்லது பாத்திரத்திலோ போட்டு அனைத்து காய்களையும் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
கடாயில் வறுத்து வைத்துள்ள ரவா மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி கிளறி வரவும். சிறதுநேரத்திற்குப்பின் வேகவைத்த காய்களை இதில் போட்டு கிளறி வரவும். தேவையானபதம் வந்தவுடன் இதை இறக்கி வைத்து சூடாக சாப்பிடவும்.
இப்படி நாம் சாதாரணமாக நினைக்கும் ரவையில் பெரிய பெரிய சமாச்சாரங்கள்எல்லாம் அடங்கியிருக்கின்றன. என்ஜாய் !
- ரவா உப்புமாவிற்கு தேவைப்படும் அதே பொருட்கள்தான். அத்துடன் கேரட்,உருளைக்கிழங்கு, காலி பிளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள்ஒவ்வொன்றும் 50 கிராம் அளவு வாங்கிக் கொண்டால் போதுமானது
செய்முறை:
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications