பிரபவ முதல் அட்சய வரை...
கிரகங்களில் முதன்மை கிரகம் சூரியன். சூரியனையே அனைத்து கிரகங்களும் சுற்றிவருகின்றன. ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தேதி பெரும்பாலும்மாறுவதில்லை. புத்தாண்டு பிறக்கும் நேரம் மாறுவதுண்டு. ஆனால் தேதிமாறுவதில்லை.
இந்த வருடம் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32நிமிடங்களுக்கு பிறக்கிறது. புத்தாண்டு மறுநாள் கொண்டாடப்படும்.
தற்போது நடந்து வருவது கலியுகம். நம் முன்னோர்கள் மொத்தம் 60 தமிழ்வருடங்களை வகுத்துள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு பெயர் உண்டு. இதுபிரபவ வருடம் என்ற பெயர் கொண்ட வருடத்தில் தொடங்கி, அட்சய என்ற பெயர்கொண்ட வருடத்தில் முடியும்.
1வது ஆண்டுக்குப் பெயர் பிரபவ ஆண்டு. 60வது இறுதி ஆண்டுக்குப் பெயர் அட்சயஆண்டு. அட்சய என்றால் அழிவற்றது. காலம் அழிவற்றது என்பதை குறிக்கும்விதமாக 60வது ஆண்டுக்கு அட்சய ஆண்டு என நம் முன்னோர்கள்பெயரிட்டிருக்கிறார்கள்.
ஒரு மனிதன் தான் பிறந்த ஆண்டை மீண்டும் காண 60 வருடகாலம் வாழ வேண்டும்.60வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
இப்போது நம்மிடம் விடை பெற்றுச் செல்லவிருப்பது 60 ஆண்டுகளில் 14வதுஆண்டான விக்கிரம ஆண்டு. பிறக்கவிருக்கும் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 15வதுவருடமான விஷு ஆண்டு.
தமிழ் வருடம் ஒவ்வொன்றும் 60 வருடத்திற்கொரு முறை மீண்டும் வரும். கடந்த1800ம் ஆண்டு முதல் பார்த்தால் விஷு ஆண்டு1881-1882ம் ஆண்டு வந்தது.அதன்பின் 1941-1942ம் ஆண்டு வந்தது. இப்போது மீண்டும் 2001-2001ம் ஆண்டுவருகிறது.
இதோடு நின்றுவிடவில்லை தமிழ் ஆண்டுக் கணக்கு. இதில் இன்னும் ஏகப்பட்டவிஷயங்கள் இருக்கின்றன.
நம் முன்னோர்கள் யுகங்களுக்கு பல கணக்குகள் வகுத்துள்ளனர். அதன்படி 360 மனிதஆண்டுகள் 1 தேவ ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
கிருதாயுகம் 4800 தேவ ஆண்டுகள் நடந்தது.... (மனித ஆண்டு கணக்குப்படி17,28,000 ஆண்டுகள்).
திரேதாயுகம் 360 தேவஆண்டுகள் நடந்தது.
துவாபாயுகம் 2,400 தேவ ஆண்டுகள் நடந்தது.
இப்போது நடப்பது கலியுகம். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இப்போதுநடப்பது 5101வது கலி ஆண்டு. அப்படியானால், கலியுகம் இன்னும் 4,26,899ஆண்டுகள் நடைபெறும்.
கிருதாயுகம், திரேதாயுகம், துவாபாயுகம், கலியுகம் என்ற இந்த நான்கு யுகத்தையும்சேர்த்து சதுர்யுகம் என அழைக்கப்படுகிறது.
அடேயப்பா.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications