மலேசியாவில் தைப்பூசம் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தைப்பூசத் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

வள்ளி, தெய்வானை சகிதமாக முருகப் பெருமானின் வெள்ளித் தேர் ஊர்வலம் காலையில் தொடங்கியது.கோலாலம்பூர் முருகன் கோவிலில் புறப்பட்ட வெள்ளித் தேர் ஊர்வலம், 20 கி.மீ. தூரத்தில் உள்ள பாடு குகைக்குசென்றடையும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வண்ணமய ஊர்வலத்தில் பங்கேற்றனர். அலகுகள் குத்தியும், காவடிகள்எடுத்தும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

ஊர்வலத்தில் இசையோடு கூடிய பாடல்களைப் பாடிக் கொண்டே பக்தர்கள் சென்ற காட்சி கண்களுக்கும்காதுகளுக்கும் விருந்தாக அமைந்தது.

பாடு குகையில் நடைபெறும் 3 நாள் தைப்பூசத் திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள்பங்கேற்கவுள்ளனர்.

சில பக்தர்கள் தங்கள் நாக்கில் அலகுகளைக் குத்திக் கொண்டு மலைக்குகையின் உச்சியில் உள்ள முருகன்சன்னிதானத்துக்கு 272 படிகளில் ஏறிச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

பழனியில் தைப்பூச கோலாகலம்:

Palani Muruganஇந்நிலையில் இன்று தமிழகத்தில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத்திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தைப் பூசத் திருவிழாவையொட்டி பழனி நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. சுமார் 5 லட்சம் பக்தர்கள்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்துள்ளனர்.

மதுரை மற்றும் கோயம்புத்தூரிலிருந்து பழனிக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

இன்று மாலை வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் தேரில் பவனி வரும் தங்கத் தேரோட்டம்நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+