நரகாசுரனுக்கு அஞ்சலியா செலுத்த முடியும்?
-ராம.கோபாலன் ஆவேச சிறப்புப் பேட்டி
நெற்றியில் பட்டை, தலையில் காவித் தொப்பி, பேச்சிலும் மூச்சிலும் இந்துத்துவம் பேசுகிறார். முகத்தில் சாந்தம்.அதே நேரம் பதில்களில் அனல் கக்குகிறார். பட்டாசு வெடிக்கத் தடை, மதமாற்றம், இந்து பாதிரியார்கள் திட்டம்என விளக்கமாகப் பேசினார் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன்.
தீபாவளியையொட்டி அவர் நமது சென்னை சிறப்புச் செய்தியாளர் சு.தா. அறிவழகனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
மனிதன் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை பல விதங்களில் வெளிப்படுத்துகிறான். திருவிழாக்களின்போது குலவையிடுவது,யாராவது பேசினால் கரகோஷம் செய்வது ஆகியவை மகிழ்ச்சியின் வெளிப்பாடுகள். அதேபோலத்தான், அரக்கன் நரகாசுரனின்மரணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே தீபாவளியின்போது பட்டாசு வெடிக்கிறார்கள்.
தீபாவளியின்போது பட்டாசு வெடிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அது நரகாசுரனின் மரணத்துக்கு மெளனஅஞ்சலி செலுத்துவது போல ஆகி விடாதா?. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியதற்குப்பின்னணியில் கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்ளனர்.
இங்கிலாந்தில் திபாவளிக்கு முன்பும், தீபாவளிக்குப் பின்னும் மொத்தம் 18 நாட்கள் தங்கு தடையின்றி பட்டாசு வெடிக்குஅங்குள்ள இந்துக்களுக்கு, இந்தியர்களுக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த தீபாவளிப் பண்டிகை உருவானநமது நாட்டில் பட்டாசு வெடிக்கத் தடையா?
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிப்பது, கட்டுப்பாடு விதிப்பது என்பது மத சுதந்திரத்தைப்பறிப்பதாகும். இந்துக்கள் தங்களது விழாக்களை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமைஅவர்களுக்கு மட்டுமே உள்ளது. அரசு இதில் தலையிட முடியாது.
சில விழாக்களை அமைதியாக கொண்டாட வேண்டும், சில விழாக்களை ஆரவாரமாக கொண்டாட வேண்டும். பட்டாசுவெடித்தால் காற்று மாசு, ஒலி மாசு ஏற்படும் என்று அரசு கூறுகிறது, ஆனால் அரசு வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால்ஏற்படாத மாசா பட்டாசு மூலம் ஏற்பட்டு விடப் போகிறது?
பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்பதற்கு சுப்ரீம் கோர்ட் இன்னொரு காரணத்தையும் கூறுகிறது. குழந்தைத் தொழிலாளர்முறையை ஒழிக்க இது உதவும் என்பதுதான் அது. ஆனால் உண்மை என்ன?. குழந்தைத் தொழிலாளர்கள் என்ற பிரிவு உண்டாகிஅது வேரூன்றி விட்டது. இப்போது அதை ஒழித்தால், பின்னர் அந்தக் குழந்தைகளுக்கு யார் சாப்பாடு போடுவார்கள், கல்விதருவார்கள், வேலை வாய்ப்புத் தருவார்கள்?
பட்டாசுகளைத் தடை செய்ய வேண்டும் என்று கூறும் கிறிஸ்தவ நிறுவனங்கள், இந்தக் குழந்தைத் தொழிலாளர்களுக்கு தங்களதுகல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், சாப்பாடும் தரத் தயாரா?
குழந்தைத் தொழிலாளர்களுக்கு உரிய இலவச கல்வியும், உணவும் தர அரசும், கிறிஸ்தவ நிறுவனங்களும் முதலில் முன் வரட்டும்.
பட்டாசுக்குத் தடை விதிப்பதால் நாட்டுக்கு பெருமளவில் அன்னிய செலாவணி இழப்பு ஏற்படும். நமது சிவகாசி பட்டாசுகள்வெளிநாடுளுக்கும் செல்கின்றன. இந்தத் தடை மூலம் பட்டாசுத் தொழிலையே கெடுக்கிறார்கள். பட்டாசுக்குப் பதில்மெழுகுவர்த்தியை ஏற்றச் சொல்கிறார்கள்.
மெழுகுவர்த்தி, இந்துக்களுக்கு புனிதமான பொருளா? யாருடைய தீபத்தை யார் ஏற்றுவது? இப்படிச் சொல்வதன் மூலம்மதத்தையே மாற்ற முயல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications