தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:
Subscribe to Oneindia Tamil
தேங்காய் போளி:
தேவையான பொருட்கள்:
மைதா மாவு: 2 கப்
தேங்காய் (பெரியது): 1
நெய்: 200 கிராம்
செய்முறை:
மைதாவை நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறிது சிறிதாக நன்றாக துருவி எடுத்து வைத்துக்கொள்ளவும். இதை மிக்சியில் போட்டு நன்கு மாவு போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
உருட்டி வைத்திருக்கும் மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு. அரைத்து வைத்துள்ள தேங்காயை இதன் நடுவில் வைத்து மீண்டும் உருண்டையாக்கி பிசைந்துஅதை வாழை இலையில் சிறிது நெய் தடவி (வாழை இலை இல்லாவிட்டால் பிளாஸ்டிக் பேப்பர் உபயோகப்படுத்தலாம்) மீண்டும் சப்பாத்தி போல் செய்து தேசைகல்லில் போட்டு நெய் ஊற்றி வாட்டி எடுத்து பரிமாறுங்கள்.
இனிப்புக்கு சர்க்கரையோ அல்லது பொடி செய்த வெல்லத்தையோ தேங்காயுடன் சேர்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications