தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:
மலபார் பழ பால் பாயசம்:
தேவையான பொருட்கள்:
பால் : 1லிட்டர்
வாழைப்பழம்: 3 அல்லது 4
சாதம் : அரை டம்ளர்
முந்திரி பருப்பு : தேவையான அளவு
ஏலக்காய் : தேவையான அளவு
நெய் : 50 கிராம்
சர்க்கரை : தேவையான அளவு
செய்முறை:
பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் வரை சூடு செய்து இறக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின் சாதத்தை அதில் போட்டு சூடு செய்யவும். சிறிதுகொதித்தவுடன் அதில் சர்க்கரையை போட்டு கலக்கிவிடவும்.
நெய்யில் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து வைத்துக் எடுத்து வைத்துக் கொள்ளவும், ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பாலும் சாதமும் நன்கு கலக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதை இறக்கி வைத்து அதில் முந்திரிப் பருப்பையும் ஏலக்காயையும்போட்டு கலக்கவும்.
வாழைப்பழத்தை மிகச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி இதனுடன் போட்டு லேசாக கலக்கி விடவும்.
இப்போது ரெடி மலபார் பழ பால் பாயசம்.
உங்கள் விருப்பம் போல் வேறு பழம் வேண்டுமானலும் சேர்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications