தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:
Subscribe to Oneindia Tamil
கடலைப் பருப்பு மசால் வடை:
தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு : 1 தம்ளர்
மிளகாய்வற்றல் அல்லது பச்சை மிளகாய் : தேவையான அளவு
வெங்காயம்: 50 கிராம்
மசாலா பொடி: தேவையான அளவு
எண்ணெய்: 1 லிட்டர்
செய்முறை:
கடலைப் பருப்பை அரை மணி நேரம்போல் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன பின் அதை மிக்சியில் போட்டு அதிக மாவாகவும் இல்லாமல் அதிககடினமாகவும் இல்லாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் மிளகாயை வெட்டி போட்டு பிசையவும். இத்துடன் மசாலா பொடியையும், வெங்காயத்தையும் வெட்டி போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானவுடன் மாவை பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி அதை எண்ணெயில் போட்டு வேக வைத்து சூடாக பரிமாறுங்கள்.












Click it and Unblock the Notifications