பாடல் கேளுங்கள்...
கடல் பூக்கள்
இசை: தேவா
பாடல்கள்: வைரமுத்து.
பாடகர்கள்: உண்ணி மேனன், உண்ணி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கிருஷ்ணராஜ், ஸ்ரீநிவாஸ்,மலேசியா வாசுதேவன், தேவா, கங்கா
சிலுவைகளே .. ரொம்ப அருமையா இருக்கு. அனுராதா ஸ்ரீராமும், உண்ணி மேனனும் லயித்துப்பாடியிருக்கிறார்கள். இசை தாளமிட வைக்கிறது. இடையிடையே வரும் சர்ச் மணியோசை, அலைகள்ஓய்வதில்லையை ஞாபகப்படுத்துகிறது.
பைத்தியமானேனே .. முதலில் ஹரிணிக்கு ஒரு சபாஷ். அழகாகப் பாடி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். பாடல்வரிகளும் சபாஷ் போட வைக்கிறது. பார்வைக்கும், காதலுக்கும் இடையே ஊசிக்குள், நூல் நுழைவது போலமென்மையாக கூறியிருக்கிறார் வைரமுத்து.
ஓ காமா: மீனவர்களுக்கும் கடலுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பைக் கூறும் பாடல். மலேசியா வாசுதேவன்,கங்கா ஒருமுறையும், இன்னொரு முறை தேவாவும் பாடியிருக்கிறார்கள். சோகமாக இருக்கிறது. ஓ காமா என்றால்என்ன என்று கேட்காமல் இருந்தால் பாட்டைக் கேட்கலாம்.
அலை அலை அலை கடலே .. ஸ்ரீநிவாஸ், உண்ணி மேனன், ஸ்வர்ணலதா இணைந்து பாடியிருக்கும், கோஷ்டிப்பாடல். நன்றாக இருக்கிறது பாடல் வரிகள். இசையும் ஓ.கே. இன்னொரு மீனவர் பாடல்.
ஆடு மேயுதே .. கிருஷ்ண ராஜுடன், புதுமுகம் சத்யா பாடியிருக்கிறார். சத்யாவுக்கு, அனுராதா ஸ்ரீராம் போலநல்ல பிரேக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இனிமையான குரல்.
கடல் பூக்கள் .. வாசம் இருக்கிறது.
பிரெண்ட்ஸ்
இசை: இளையராஜா.
பாடல்கள்: பழனி பாரதி.
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், விஜய் ஜேசுதாஸ், சுஜாதா, தேவன்.
வெளியான ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட 1 லட்சம் கேசட்டுகள் வரை விற்பனையாகி, பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கிறது, பிரெண்ட்ஸ்.
இளைய ராஜா மீண்டும், மிரட்டியிருக்கிறார். இசையில், தென்றலும், புயலும் மாறி, மாறி வருகிறது. விஜய்பாடல்களுக்கு இடையே அறிமுகப் படுத்தி பேசுகிறார்.
குயிலுக்கு .. எஸ்.பி.பி, ஹரிகரன், சங்கர் மகாதேவன் என்று பெரிய தலைகள் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். நட்பைவலியுறுத்தும் பாடல். கிராமிய மணம் தூக்கலாக இருக்கிறது. பாடலுடன், இசையும் நன்றாக இருக்கிறது. புயல்போல வந்து போகிறது பாடலும், இசையும்.
மஞ்சள் பூசும் .. தேவன், சுஜாதா குரலில், சுமாரான பாடல்.
பெண்களோட போட்டி .. தமிழுக்கே உரிய போட்டிப் பாடல். ஆனால் இது நன்றாக இருக்கிறது. ஹரிகரன்,சுஜாதா குரல் கொடுத்துகிறார்கள். ஒரு தடவைக்கு மேல் கேட்கலாம்.
பூங்காற்றே .. ஹரிகரனின் வேதனைக் குரலில் வரும் தென்றல். மெலடிக்குத் தான்தான் ராஜா என்பதைஅழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் ராஜா. மனதுக்கு இதமாக வருடிக் கொடுக்கும் இந்தப் பாடல் ஹிட் ஆகலாம்.
ருக்கு ருக்கு .. கொஞ்சம் பழைய பாணி ராஜா பாடல். கான கந்தர்வன் ஜேசுதாஸின் வாரிசு, விஜய் ஜேசுதாஸ்பாடகராக அறிமுகமாயிருக்கிறார். குரல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பாடல்?
வானம் பெரிசுதான் .. நட்பு பெரிது என்று கூறும் பாடல். அடி, பலமாக இருக்கிறது. எஸ்.பி.பி., அருண்மொழி,விஜய் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்கள்.
படம் எப்படியோ, பாடல்கள், விஜய்க்கு நட்பாகவே இருக்கிறது.
தீனா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்கள்: வாலி, விஜய் சாகர்.
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், ஹரினி, பவதாரிணி.
பதினாறு அடி பாய்ந்திருக்கிறார் பிள்ளை. இளைய ராஜாவின், இளைய வாரிசு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்தீனா, தமிழகம் முழுதும் தீயாகப் பரவியிருக்கிறது.
சில தொடர் தோல்விகளுக்குப் பிறகு அஜீத் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் என்பதால் பாடல்களில் கூடுதல்கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.
காதல் வெப்சைட் .. துள்ள வைக்கும் டியூன். சங்கர் மகாதேவனின் மிரட்டும் குரலில் பளிச்சிடுகிறது.
சொல்லாமல் தொட்டு செல்லும் .. மெலடி மன்னனின் மகன் என்பதை நிரூபித்திருக்கிறார் யுவன். ஹரிகரனின்குரலில் காதலின் வேதனை கசிகிறது. காதலைப் பார்த்து கடவுள் பயப்படுவதாக வரும் வரிகள் வித்தியாசமானவரிகள். நெஞ்சைத் தொடுகிறது.
வத்திக்குச்சி பத்திக்காதுடா .. ரஜினி ஸ்டைல் பாடல். அஜீத் ரசிகர்களின் தேசிய கீதமாகும் வாய்ப்பு உள்ளது.யாரையோ நினைத்துப் பாடுவது போல உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், குரலை வளைத்துப் பாடியிருக்கிறார்.யுவன் நன்றாக பெண்டெடுத்திருப்பது தெரிகிறது.
தென்றல் வரும் வழியில் .. ஆற்றங்கரையில் அமர்ந்து கேட்பது போல ஒரு பரவசம். ஹரிகரன், பவதாரிணிஅசத்தியிருக்கிறார்கள்.
நீ இல்லை என்றால் .. எங்கேயோ கேட்ட ராகம் போல இருந்தாலும், நன்றாக இருக்கிறது. பவதாரிணி இடையில்வந்து போகிறார்.
தீனா .. தீயாக இருக்கிறது.
மின்னலே
இசை: ஹேரிஸ் ஜெயராஜ்
பாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, டிம்மி, பாம்பே ஜெயஸ்ரீ, தேவன், சங்கர் மகாதேவன், உன்னி கிருஷ்ணன்,ஹரிணி.
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம் .. தேவன் தாலாட்டியிருக்கிறார். காதலியின் பிரிவால் காதலன் தவிப்பதைஉருக்கமான குரலில் கொட்டியிருக்கிறார் தேவன்.
ஓ மாமா .. அருமையான இசை. கேட்கலாம்.
வெண்மதியே வெண்மதியே நில்லு .. மெலடி மழை பொழிந்திருக்கிறது. அருமையான பாடல், ரூப் குமார்குரலில், திரும்பக் கேட்கலாம்.
வேறென்ன வேண்டும் ... மீண்டும், மீண்டும் கேட்கும் வகையில் ரம்யமான பாட்டு.
வசீகரா .. பாம்பே ஜெயஸ்ரீ வசீகரிக்கிறார். இருவருக்குப் பிறகு அவரது பெயர் சொல்லும் வகையில் நன்றாகஇருக்கிறது. சொக்க வைக்கிறது பாடல்.
மின்னலே .. பொறி பறக்கிறது
வாஞ்சிநாதன்
இசை: கார்த்திக் ராஜா
பாடல்கள்: சினேகன், முத்து விஜயன், முத்துக்குமார்.
பாடகர்கள்: ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், உண்ணி கிருஷ்ணன், சொர்ணலதா, ஹரிணி, சுஜாதா.
சிரிக்கும் சிரிப்புல .. இசை ரசிக்கிற மாதிரி இருந்தாலும் பாடல் வரிகள் கேட்க முடியவில்லை.
ரோஜா வண்ண ரோஜா .. ஜேசுதாஸ் குரலில் இந்தப் பாடல் மட்டும்தான் கேட்கும் வகையில் இருக்கிறது.
அமுல் பேபி, அமுல் பேபி .. வெஸ்டர்ன் மியூசிக் நினைப்பில் ஏதோ கொடுத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பாடல்வரிகளை கவனிக்க மறந்து விட்டார்.
முத்தமிட வேண்டும் .. பாடல் வரிகள் சராசரிக்கும் மிகக் குறைவான மதிப்பெண்களையே பெறுகிறது.
மொத்தம் 4 பாட்டுக்கள். ஆனால் ஜேசுதாஸ் பாடிய பாட்டைத் தவிர ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை.
வாஞ்சிநாதன் .. ஏமாற்றம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications