பூச விழா காணும் பழனி முருகன்
அறுபடை வீடுகளில் பழமையானது பழனி. இங்கு மூலவர் கோவணாண்டியாககாட்சியளிக்கும் தண்டாயுதபாணி சுவாமி. இங்கு தைப்பூச திருவிழா மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப் பூச திருவிழா புதன்கிழமை(07.02.2001) நடைபெறுகிறது
முருகனுக்குரிய திருவிழாக்களில் தைப் பூச திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.தைப்பூசத்தன்று மக்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி தேர் இழுத்தல் போன்றவற்றில்ஈடுபடுவர்.
அலகு குத்தி தேர் இழுத்தல் என்பது சப்பரம் போன்றவற்றை கம்பியில் இணைத்து அந்தகம்பியை முதுகில் குத்திக்கொண்டு அதை கோவிலுக்கு இழுத்து வருவதுதாகும்.
தைப்பூசத் திருவிழா தை மாதம் பூச நட்சத்திர தினத்தன்று நடை பெறும். இந்த திருநாள்10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் பழனியின் அடிவாரத்தில்நடைபெறும்.
பக்தர்கள் சுமந்து வரும் பால்குடத்திலிருக்கும் பால் மூலம் தண்டாயுதபாணி சுவாமிக்குஅபிஷேகம் நடைபெறும்.
10 நாட்களும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பழனிக்கு கால் நடையாக நடந்து வருவது வழக்கம்.
தைப்பூச விழா தொடங்கிய முதல் நாளிலிருந்தே பக்தர்கள் பெருந்திரளாக வரத்தொடங்கி விட்டார்கள். தைப் பூச தினமான புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி மட்டுமல்லாது, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை என முருகன்கோவில்கள் அனைத்திலுமே தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர் வாழும் தலங்கள்அனைத்திலும் தைப்பூச விழா சிறப்புர கொண்டாடப்படுவது வழக்கம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications